பிக் பாஸ் 6:அலப்பறையை கூட்டும் ஜி பி முத்து.. ஆர்ப்பரிக்கும் “மீம்ஸ்” அலட்டிக்காம பார்த்துட்டு போங்க!
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கியதும் முதல் ஆளாவதாக களம் இறங்கிய ஜிபி முத்து விற்காகவே ரசிகர்கள் பட்டாளம் பிக் பாஸை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிச்சையமான ஜி பி முத்து செய்யும் செயல்கள் தற்போது மீம்ஸ்களாக சமூக வலைத்தளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் தொடங்கியதும் ஜி பி முத்துவின் பெயரில் பல ஃபேன்ஸ் பேஜ்கள் உலா வருகின்றது. அதில் கண்டண்டே இல்லாமல் ஜிபி முத்து பேசும் வார்த்தைகள் இடம் பிடித்து விடுகிறது.

பரிச்சயமான முகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக ஜி பி முத்து அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாக வேண்டும் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து இருந்தனர் .தற்போது அது நடைபெற்று இருக்கிறது. இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் செலிபிரிட்டிகள் முதல் ரசிகர்கள் வரை பலருக்கும் பரிச்சயமான ஒரே முகமாக ஜிபி முத்து இருந்து வருகிறார்.

வளர்ச்சி பெருசு தான்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களையும் தன்னுடைய அசால்ட்டான நடிப்பு மற்றும் வெகுளித்தனமான கேரக்டர் மூலமாக அனைவரையும் ஜி பி முத்து கவர்ந்து உள்ளார். இவருக்கு ஆரம்பத்தில் அதிகப்படியான நெகட்டிவ் கருத்துக்கள் வெளியாகி வந்தது. ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் இவர் தற்போது பிக் பாஸ் செல்லும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார். உள்ளே இருக்கும் பல பிரபலங்களுக்கு மத்தியில் இவர் செய்யும் சேட்டைகளும் அட்ராசிட்டிகளும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருந்து வருவதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

முதல் நாள் அலப்பறை
முதல் நாளில் அறிமுகமான அன்று கமல் ஜி பி முத்துவை அறிமுகம் செய்வதை வைத்த கமலும் ஜிபி முத்துவின் ஃபேன் தானாம். ஜி பி முத்துவிடம் பிக் பாஸ் கெட்ட வார்த்தையை கண்ட்ரோல் பண்ணிக்கோங்க என்று கூறியதை வைத்து ஒரு மீம்ஸ் வெளியிட்டு இருக்கிறார்கள்

வெள்ளந்தியான பேச்சு
வெள்ளந்தியான பேச்சால் பலரையும் ரசிக்க வைக்கும் ஜி பி முத்து பிக் பாஸ்க்கு பதிலாக பிக் பாக்ஸ் என்று அழைத்ததை வைத்து மீம்ஸ் ஒன்றை தட்டி விட்டிருக்கிறார்கள்.

லெட்டர் பை
ஜி பி முத்துவின் ஆர்மி ஒன்று, ஜிபி முத்து அறிமுகம் ஆகும்போது அவர் தோளில் தொங்கிய பையை குறித்து, வாங்க தலைவரே லெட்டர் கூடவேவா? செம மாஸ் என்ட்ரி தலைவரே என்று வரவேற்று இருக்கிறார்கள். வெளியே இருக்கும் போது எப்படி லெட்டர் படித்து அனைவருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தாரோ அதுபோலவே இப்போது கேமரா கூட பேசிகிட்டு இருக்காரு என்று ஒரு மீம்ஸ் வெளியாகி இருக்கிறது.

ஜி பி முத்துவின் பதில்
பிக் பாஸ் ஜி பி முத்துவை கான்பிரன்ஸ் ரூமுக்கு வாங்க என்று அழைத்தால் ஜிபி முத்துவின் பதில் இதுவாகத்தான் இருக்கும் என்று இன்னொரு மீம்ஸ் வலம்வருகிறது.

இதுவாகத்தான் இருக்கும்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜி பி முத்துவின் மனநிலை இதுதான் என்று, இங்க இருக்கவங்க யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் இவங்க எல்லோருக்கும் என்னை தெரியும் என்று சொல்வது போல ஒரு மீம்ஸ் வெளியாகி இருக்கிறது.

மீண்டும் லெட்டர்
எப்போதுமே லெட்டர் படிச்சு பிரபலமான ஜி பி முத்து வீட்டுக்குள்ளும் லெட்டர் எடுத்து வந்தால் இதுதான் நிலைமை என்று மற்றொரு மீம்ஸ் உலா வருகிறது.

ஜி பி முத்துவின் கம்பளைண்ட்
ஜி பி முத்து சக போட்டியாளர்களை குறித்து பிக் பாஸ் இடம் கம்ப்ளைன்ட் செய்தால் இப்படித்தான் செய்வார் என்று ஒரு மீம்ஸ் வெளியாகி இருக்கிறது.

அப்படின்னா என்ன
ஒவ்வொரு வாரமும் நடக்கும் எலிமினேஷன் பற்றி பேசினால் ஜி பி முத்துவின் ரியாக்சன் இதுவாக தான் இருக்குமாம். எலிமினேஷனல் என்றால் என்ன என்று அவர் குழப்பத்தோடு கேட்டதை இப்போது மீம்ஸ்களில் பதித்து விட்டார்கள்.

ஆதாம் என்றால் யாரு
கமல் ஆதாம் ஏவாலை பற்றி கேட்டா? ஜிபி முத்து இப்படி எல்லாம் பேசுகிறார் என்று கோபித்து செல்வது போல இன்னொரு மீம்ஸ் வெளியாகி இருக்கிறது. தனியாக இருப்பதை நினைத்து புலம்பிய ஜிபி முத்து விடம் ஏவால் பற்றி பேசிய கமலை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இங்கிலீஷ் நமக்கு சரி படாது
ஜி பி முத்து விடம் இங்கிலீஷில் பேசினால் அவருடைய வழக்கமான சாபம் வந்துவிடும் என்பதை ஞாபகம் மற்றொரு மீம்ஸ் ஞாபகம் படுத்திருக்கிறது. எப்போதும் போல செத்த பயலே இது எனக்கு புரியவில்லையே என்று இவர் திட்டுவது எப்போது என்று எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் மீம்ஸ்களில் அதை இறக்கி வருகிறார்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications