பிக் பாஸ் 6: கதறி அழுத ஜிபி முத்து, ஆதரவாக வலம் வரும் மீம்ஸ்.. தனலட்சுமியை இப்படி கலாய்ச்சிட்டாங்களே
சென்னை: பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஜி பி முத்து பற்றி தனலட்சுமி பேசிய வார்த்தைக்காக, ஜிபி முத்து அழுது கொண்டிருக்கிறார்.
அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு கலகலப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஜிபி முத்து அழுவதை பார்த்து சக போட்டியாளர்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ஜி பி முத்துவின் அழுகைக்கு காரணமான தனலட்சுமியை நெட்டிசன்கள் மீம்ஸ்களால் கலாய்த்து வருகிறார்கள்.

தனலட்சுமி குற்றச்சாட்டு
இன்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தனலட்சுமி ஜிபி முத்து நடிக்கிறார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அதற்கு ஜி பி முத்து கண் கலங்கிய படியே என்னுடைய மகள் வயசு இருக்கும் ஆனால் என்னை பார்த்து இப்படி சொல்லிவிட்டாரே என்று கேமரா முன்பு புலம்பி இருக்கிறார். அதைப் பார்த்தால் நெட்டிசன்கள் தனலட்சுமியின் மீது காண்டாகி அவரை மீம்ஸ் களால் கலாய்த்து வருகிறார்கள்.

தனலட்சுமிக்கு ஒரு எவிக்சன் போடு
ஜி பி முத்துவை அழ வைத்த காரணத்தினால் இந்த வாரம் தனலட்சுமியை வெளியேற்றி விட வேண்டும் என்று ஜிபி முத்துவின் ஆர்மி வெறித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் வெந்து தனித்தது காடு தனலட்சுமிக்கு ஒரு எவிக்ஷனை போடு என்று முழக்கமிட்டு வருகிறார்கள்.

எளிமையா சொல்லிட்டாங்க
ஜி பி முத்துவை தனலட்சுமி எதிர்த்து சண்டையிட்டு பேசுவதாலும் ஜி பி முத்து கேரக்டரை தப்பாக பேசுவதாலும் தனலட்சுமி தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளி போடுவது போல போட்டுக் கொண்டார் என்று இன்னொரு மீம்ஸ் பறக்க விட்டிருக்கிறார்கள்.

கலங்காதே ராசா
நல்லவர்களைத் தான் இந்த உலகம் அழிக்க நினைக்கும் அன்று ஓவியா மற்றும் ஆரி இன்று ஜிபி முத்து ஆனால் மக்கள் தீர்ப்பால் நல்லவர்கள் இறுதியில் வெல்வார்கள் என்று ஜிபி முத்துவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள் ஒரு மீம்ஸை தட்டி விட்டிருக்கிறார்கள்.

நண்பர்களுக்கு தெரியும்
ஜி பி முத்து நடிக்கிறார் என்று நேற்றைய எபிசோடு தனலட்சுமி கூறியிருந்தார். அது போதாது இன்றும் அவர் பஞ்சாயத்தை தொடங்க ஜி பி முத்து நான் நடிக்கிறேனா? இல்லையா? என்று என்னுடைய நண்பர்களுக்கு தெரியும். நான் எப்போதுமே இப்படித்தான் என்று குழந்தை போல தேம்பி அழுவதை பொறுத்துக் கொள்ளாத ரசிகர் ஒருவர் ஒரு மீம்ஸை தட்டி விட்டு இருக்கிறார்.

சோகமான காலை
ஜி பி முத்து விடம் தனலட்சுமி முகத்துக்கு நேராக திட்டியதை பொறுத்துக் கொள்ளாத முடியாத ரசிகர் ஜிபி முத்துவின் வருத்தத்தை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர் ஒருவர் காலை வேளையில் மூட் அவுட் என்று ஒரு சோகமான போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

எச்சரிக்கை
பிக்பாஸ் ஆறாவது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் பலருக்கும் பரிசயமாக இருக்கும் ஒரே போட்டியாளர் ஜி பி முத்து தான் தற்போது அவர் அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது சோகத்தில் இருக்கிறார் இதனால்
தனலட்சுமி மீது காண்டாகி நெட்டிசன் ஒருவர் தனலட்சுமியை கலாய்த்து இருக்கிறார்.

சிரிக்க வச்ச மனுஷன்
ஜி பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் பலரையும் சிரிக்க வைத்து தன்னுடைய நகைச்சுவையாலும், வெள்ளந்தியான பேச்சாளும் தனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். இவருடைய வார்த்தைகள் பல இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், கெட்ட வார்த்தைகளாகவும் இருந்தாலும் இவருடைய தனி அடையாளமாக அது கருதப்பட்டு இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது அவர்கள் ஜிபி முத்துவின் சோகமான முகத்தை பார்க்க முடியாமல் வெளியிட்ட மீம்ஸ் ஒன்று ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

மீசை வைத்த குழந்தை
ஜி பி முத்து அனைவரையும் கவரும் வகையில் நகைச்சுவையாக டான்ஸ் ஆடி, பாட்டுப்பாடி பிக்பாஸ் வீட்டிற்குள் பல என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஜி பி முத்து மீசை வைத்த குழந்தை எங்க தலைவர் என்று கொண்டாடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications