Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தூங்கிட்டான் சார்..” இதென்ன தட்டி தூக்கும்னு பார்த்தா குட்டி தூக்கம் போடுது.. பெங்கல் புயல் மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ட்விஸ்ட்' மேல் ட்விஸ்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஃபெங்கல் புயல். புயல் எச்சரிக்கையால் அச்சத்தில் இருந்த மக்கள், இப்போது, 'ஃபெங்கல்' புயலை பார்த்து வருவியா மாட்டியா என மீம் போடும் அளவுக்கு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது புயல். ஃபெங்கல் புயலை வைத்து சமூக வலைதளங்களில் பரவி வரும் மீம்ஸ் சிலவற்றை பார்க்கலாம்.

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று (நவம்பர் 29) புயலாக வலுப்பெற்று நாளை (நவம்பர் 30) பிற்பகலில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.27 புயலாக வலுப்பெறும் என கடந்த 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்ததால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தற்காலிக புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, கரையை நெருங்கும் போது வலுவிழந்து மீண்டும் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என்று நேற்று காலை கூறப்பட்டிருந்தது. நேற்று மாலை நிலவரப்படி புயல் உருவாகாது என்றும் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருக்கு.. ஆனா இல்லை என கண்ணாமூச்சி காட்டி வரும் 'ஃபெங்கல்' புயல் பற்றி, நெட்டிசன்கள் மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

புயல் வருமா? வராதா? நம்பலாமா..? வேண்டாமா? உண்மையிலேயே ஃபெங்கல்னு புயல் இருக்கா? இல்ல புரளியா?

fengal cyclone tamilnadu rain

--

நகராமல் இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை - செய்தி

சார்.. தூங்கிட்டான் சார்..

இதென்ன தட்டித் தூக்கும்னு பார்த்தா அப்பப்ப கடல்லயே குட்டித் தூக்கம் போடுது..!

fengal cyclone tamilnadu rain

--

மிஸ்டர் பெங்கல் புயல்..

ஒனக்கு பொங்கல் புயல்ன்னு பேர் வச்சிருக்கலாம் போல..

இப்படி நீ 3 கி.மீ ஸ்பீட்ல வந்தா..என்னிக்கு வந்து சேர்றது? லேசி ஃபெல்லோ..!

fengal cyclone tamilnadu rain

--

டிராக்கர்ஸ்: இப்ப புயல் எங்க இருக்குனா...

ஃபெங்கல்: உங்க பொடனிக்கு பின்னாடி தான் இருக்கேன் ஓவர் ஓவர்

fengal cyclone tamilnadu rain

--

எங்கடா இங்க இருந்த பெங்கல் புயல காணோம்

fengal cyclone tamilnadu rain

மீண்டும் தாமதமாகிறது ஃபெங்கல் புயல்!

fengal cyclone tamilnadu rain

--

ஃபெங்கல் புயல் மைண்ட் வாய்ஸ்

இப்போ நா வரட்டா வேணாமா ?

இவ்ளோ முன்னெச்சரிக்கையாலாம் இருந்தா நமக்கு செட் ஆகாது

பேசாம நா ஆந்திராவுக்கு போயிடவா?

fengal cyclone tamilnadu rain

--

ஃபெங்கல் to மீடியா

கெளம்பியாச்சுனா ஓடனே வந்துடனும் தம்பி.. ஏன் ரெண்டு நாளா ஒரே எடத்துல இருக்கீங்க

ஃபெங்கல் புயல்: நீங்க ஏன் சார் இவ்ளோ பீல் பண்றீங்க?

fengal cyclone tamilnadu rain

--

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவானால் அதற்கு ஃபெங்கல் புயல் என பெயர் சூட்டிட சவூதி அரேபியா பரிந்துரை.

அய்யோ! இந்த புயலுக்கு பெங்கல்னு வச்சதுக்கு பதிலா..
பொங்கல்னு வச்சிருந்தா பொங்கி சமைச்சு சாப்ட்ருக்கலாமேயா?

fengal cyclone tamilnadu rain

--

ஏதோ ஒண்ணு குறையுதே ?

ஆஹ். புயலுக்கு பேரு வைக்கல ....

"பெங்கல் புயல் " இப்பதான் அழகா லட்சணமா இருக்கு!

fengal cyclone tamilnadu rain
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+