ஆமா ஜெயிச்சது யாரு? ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.. தோனி அதிரடியால் தோற்றும் CSK ரசிகர்கள் பரவசம்!

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தாலும், தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடினர். சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்தன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

நடப்பு ஐபிஎல் தொடரின்13-வது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தியது ரிஷ்ப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்தப் போட்டியின் கடைசி கட்டத்தில் பேட் செய்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை விருந்து படைத்தார். 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் தோனி. மேட்ச்சை டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றிருந்தாலும், தோனி காட்டிய அதிரடியைத்தான் மைதானமே கொண்டாடியது.

Fans celebrates Dhoni than DC victory memes circulates in social media

முன்னதாக, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்திலேயே 2 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஓவர்கள் போய்க் கொண்டிருந்தாலும் ஸ்கோர் ஏறவில்லை. தொடர்ந்து ரஹானே மற்றும் மிட்செல் இணைந்து நிதானமாக ஆடினர். அவர்கள்து விக்கெட்டும் போனதால் அணி தடுமாறியது.

16.1 ஓவரில் 6 விக்கெட்களுக்கு 120 ரன்கள் என இருந்த நிலையில், தோனி பேட் செய்ய களத்துக்கு வந்தார். இந்த சீசனில் முதல் முறையாக தோனி கிரீஸுக்கு பேட்டிங் ஆட வந்த காரணத்தால் மைதானத்தில் போட்டியை பார்த்த பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தோனி தான் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவர் முழுவதும் பேட்டிங் செய்தார் தோனி. அந்த ஓவரில் மட்டும் தோனி 4, 6, 0, 4, 0, 6 என்று 20 ரன்கள் விளாசினார். தோனி மொத்தமாக, 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். இறுதியில் சென்னை அணி, 171 ரன்கள் எடுத்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.

டெல்லி அணி வென்றாலும், மைதானம் முழுக்க தோனியின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்து கத்தினர். வென்றது யார் என்றே குழம்பும் அளவுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் உற்சாகம் அமைந்திருந்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணி மேட்ச்சை வென்றிருந்தாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் மொத்தமாக அள்ளிச் சென்றுவிட்டார் தோனி. ஆட்டத்தில் தோற்றிருந்தாலும், தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் கொண்டாடித் தீர்த்தனர். இதுதொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

Fans celebrates Dhoni than DC victory memes circulates in social media
Fans celebrates Dhoni than DC victory memes circulates in social media
Fans celebrates Dhoni than DC victory memes circulates in social media
Fans celebrates Dhoni than DC victory memes circulates in social media
Fans celebrates Dhoni than DC victory memes circulates in social media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+