"இவனை யாருடா எழுப்பிவிட்டது" ஓஜி அணியாக கம்பேக் கொடுத்த மும்பை.. பல்தான்ஸ் வெளியிட்ட தெறி மீம்ஸ்!
அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று மாஸ் கம்பேக் கொடுத்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள மும்பை அணி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் டீசர் காட்சியின் இறுதியில் ஒரு கிழவி, "அடியேய்.. ஓஜி இஸ் பேக்-டி" என்று வசனம் செல்வார். அதனை பும்ரா முதல் பந்திலேயே சாய் சுதர்சன் விக்கெட்டை வீழ்த்தியதோடு ஒப்பிட்டு, "The OG is Back" என்று பும்ராவுக்காக உருவாக்கப்பட்டுள்ள மீம் திரும்பி வந்துட்டேன்டா ரகம்.

பிரண்ட்ஸ் படத்தில் விஜய் மற்றும் சூர்யாவை பார்த்து வடிவேலு, "இனிமே அந்த 2 பயலுகளுக்கும் இங்க வேலை கிடையாது.. கிளம்ப சொல்லுடா" என்பார். அதில் வரும் வடிவேலுவை ஹர்திக் பாண்டியாவாகவும், விஜய் மற்றும் சூர்யாவாக ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சஹர் இருவரையும் மாற்றி, இனிமே அந்த 2 பயலுகளுக்கும் வேலை கிடையாது என்று சொல்லி விரட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிக்கிட்டாங்க ரகம்.

சார்பட்டா பரம்பரை படத்தில் கபிலனை பார்த்து ரங்கன் வாத்தியார், "உன்னைய போய் அசிங்கப்படுத்திட்டேனேடா.. என்னா மாதிரி ஆடிட்ட" என்று பாராட்டுவார். அதில் வரும் கபிலனாக மும்பை அணியையும், ரங்கன் வாத்தியாராக ரசிகர்களையும் மாற்றி, "உங்களை போல் அசிங்கப்படுத்திட்டேனா பா.. என்னா மாரி ஆட்டம்டா கபிலா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள கடப்பாரை கம்மிங் மேடம் ரகம்.

பிறகு படத்தில் வெட்டியானாக இருக்கும் வடிவேலு மற்றும் அவரின் சிஷ்யர்கள், உயிருள்ள ஒருவரை புதைத்துவிடுவார்கள். அவர் திடீரென மண்ணுக்குள் இருந்து எழுந்துவிடுவார். அப்போது வடிவேலு, டேய்.. இது யாரு பாத்த வேலைடா என்று பீதியாவார். அதில் வரும் வடிவேலுவாக சிஎஸ்கே அணியையும், சிஷ்யனாக சுப்மன் கில்லையும், புதைந்து எழுந்தவராக மும்பை அணியையும் மாற்றி, இவனை யாருடா எழுப்பிவிட்டது என்று வடிவேலு கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சும்மா கிடந்தவனலாம் எழுப்பிவிட்டுட்டாங்க ரகம்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications