யாரோ வாட்சப்ல ஸ்டேட்டஸ் போட்ருக்காங்க.. உடனே பார்த்தா நாம வெட்டினு தெரிஞ்சிடும்.. வெயிட் பண்ணுவோம்!
வாட்சப் ஸ்டேட்டஸ்கள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: அடுப்படிக்கு தண்ணீர் குடிக்கப் போவதென்றால்கூட ஸ்டேட்டஸ் வைப்பவர்கள் ஒரு ரகம் என்றால், அதனையும், 'ப்ளீஸ் எனக்கு அனுப்பேன்..' எனக் கேட்பவர்கள் மற்றொரு ரகம். அப்படிப்பட்டவர்களைக் கலாய்த்து பகிரப்படும் மீம்ஸ்கள் ஏராளமோ ஏராளம்.

பக்கத்தில் இருப்பவர்களிடம்கூட பேச மறந்து எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதாலோ என்னவோ, நாம் என்ன செய்கிறோம் என்பதை சமூகவலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு சொல்ல நினைக்கிறார்கள் சிலர். சரி, முக்கியமான விசயம் என்றால் ஓகே.. அதற்காக பாத்ரூம் போவது முதற்கொண்டு, வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைப்பவர்களை என்னவென்று சொல்ல...

நெட் பேக்கை எப்படியும் தீர்த்தே ஆக வேண்டும் என வாட்சப் ஸ்டேட்டஸில் ரயில் விடுபவர்கள், நண்பர்கள் வயிறு எரியட்டும் என காதலிக்காத போதும் காதல் ஸ்டேட்டஸ்களாகப் பகிர்பவர்கள், நாம் கோபமாக இருப்பவர்களிடம் நமது கோபத்தை வெளிக்காட்ட தத்துவமழை பொழிபவர்கள் என வாட்சப் ஸ்டேட்டஸில் பல ரகம் உண்டு.

இன்னும் ஒரு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் அலைந்து தேடி எல்லாம் ஸ்டேட்டஸ் வைக்க மாட்டார்கள். மற்றவர்கள் யாராவது வைத்திருக்கும் ஸ்டேட்டஸை கேட்டோ அல்லது கேட்காமல் மற்ற ஆப்களின் துணையோடு சுட்டோ தங்களது ஸ்டேட்டஸ்களில் வைத்து விடுவார்கள்.

இப்படியாக வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைப்பவர்களைக் கலாய்த்து நிறைய மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications