For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #இடுப்புகிள்ளிதிமுக... இது புதுசாவுல்ல இருக்கு!

சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்வது நெட்டிசன்ஸ் வேலை. இடுப்பு கிள்ளி திமுக என்ற பெயரில் ஹேஸ்டேக் போட்டு இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    கரூரில் ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளிய இளைஞர்

    சென்னை: எது எதுக்கோ ஹேஸ்டேக் போட்டு உலக அளவில் டேக் செய்யும் நெட்டிசன்ஸ், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக #இடுப்புகிள்ளிதிமுக என்று ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகமெங்கும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்க கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவர் சென்னை வந்திருந்தார். அப்போது ஒரு நிர்வாகி தனது இடுப்பை கிள்ளிவிட்டதாக புகார் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    போராட்ட கேப்ல இடுப்புல கை வச்சவன் யாரு? என்று கேட்டதோடு நிற்காமல், சமூக வலைத்தளங்களில் சந்தி சிரிக்க வைத்துக்கொண்டுள்ளனர். விஜயகாந்த் சொன்ன 'தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க' என்ற வார்த்தையை விட #இடுப்புகிள்ளிதிமுக அதிகம் ட்ரோல் செய்யப்படுகிறது. அச்சில் ஏற்ற முடிந்தவை மட்டும் உங்கள் பார்வைக்கு.

    இப்படி ஒடைச்சிட்டீங்களே

    நேத்துதானேடா மக்கள் மத்தியில கொஞ்சம் நல்ல பேரு எடுத்தேன்.,அதை இப்படி சல்லிசல்லியா ஒடைச்சுட்டீங்களேடா என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

    இடுப்பு கிள்ளி

    நலங்கிள்ளி
    நெடுங்கிள்ளி
    இடுப்புகிள்ளி என்று கூறி கிண்டலடித்துள்ளார் இன்னொருவர்.

    இடை வேலை

    "இடை வேளை" ன்னா அதிமுக ....."இடை" வேலைன்னா திமுக. அதாவது உண்ணாவிரதப் போராட்டத்தின் இடைவேளையில் பிரியாணி சாப்பிட்டதையும் இடையில் வேலை காட்டிய திமுகவினரையும் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார் இவர்.

    இது புதுசாவுல்ல இருக்கு

    நலங்கிள்ளி படிச்சுருக்கேன் இது என்னடா புதுசா இடுப்புகிள்ளி..? புதுப்புது தமிழ் வார்த்தைகளை அறிமுகபடுத்துவதில் திமுகவுக்கு நிகரில்லை என்று கூறியுள்ளார் இந்த வலைஞர்.

    திருக்குறள் வேறயா?

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே, இடுப்பை கிள்ளுவதாம் பந்த் என்று திருக்குறள் பாணியில் கிண்டலடித்த இந்த வலைஞர், போராட்ட கேப்புல பிரியாணி தின்ன அந்த கட்சிக்காரங்க எங்கே? அதே கேப்புல இடுப்பைக் கிள்ளுன இந்த கட்சிக்காரங்க எங்கே? என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Iduppu killi DMK hastag goes viral on Social media twitter trend in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X