ஆண்கள் தினம்: "உனக்கெல்லாம் யாரு விஷ் பண்ண போறா, நாமளே பண்ணா தான்" மீம்ஸ்களை பரப்பும் நெட்டிசன்கள்
சென்னை: சர்வதேச ஆண்கள் தினம் இன்று. ஆனால் யாரும் வாழ்த்துக்கள் கூட சொல்லவில்லை என்பதை வைத்து.. "உனக்கெல்லாம் யாரு விஷ் பண்ண போறா.. நாமளே பண்ணாதா உண்டு.." என்பன போன்ற மீம்ஸ்களை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன.
சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது.
குடும்பத்திற்காக உழைக்கும் ஆண்களின் தியாகத்தை பாராட்டுதல் அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தி ஆண்கள் தினம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது.

பரவும் மீம்ஸ்கள்
வழக்காக சர்வதேச பெண்கள் தினத்திற்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவியும். ஆனால், ஆண்கள் தினம் என ஒன்று இருப்பதே அறியாத அளவுக்கு இன்றைய தினம் கடந்து விடுவதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மீம்ஸ்களையும் போட்டு இணையத்தில் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கின்றனர்.

ஒரே பஜ்ஜி.. ஒரே புட்டு..
முத்து படத்தில் ராணி போல வேடமிட்டு வரும் மீனாவிற்கு கேரளாவில் தடல் புடல் வரவேற்புடன் உணவு பரிமாறப்படும். மறுபுறம் ரஜினிக்கு ஒரே புட்டும் பஜ்ஜியும் வைக்கப்படும். இந்த காட்சியை வைத்து பெண்கள் தினத்திற்கு வாழ்த்துக்கள் குவிவதையும் ஆண்கள் தினத்திற்கு வாழ்த்துக்களே இல்லாமல் இருப்பதையும் போட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்.

பெண்கள் தினம் என்றால் மட்டும் வாழ்த்து மழை
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் உள்ள காட்சிகளை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸ் ஒன்று சமூக வலைத்தளத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த மீம்சில்,. ஆண்கள் தினம் என்றால் ஒருவன் வாழ்த்துவது கிடையாது..பெண்கள் தினம் என்றால் மட்டும் வாழ்த்து மழைபொழிவது என்று பதிவிட்டு நகைச்சுவையாக பகிர்ந்துள்ளனர்.

சூர்ய வம்ச பட மீம்ஸ்
மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லும் பசங்க எங்க.. ஆண்கள் தினமே தெரியாம இருக்கும் பெண்கள் எங்க? என்று சூர்ய வம்சம் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை வைத்து போட்டுள்ள மீம்சும் இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

நாமளே விஷ் பண்ணாதான் உண்டு
கன்னி ராசி படத்தில் கவுண்டமனி இந்த வீட்டில் உனக்கு யார் மரியாதை தர்றாங்க நானே கொடுக்கிறேன் என்று அவர் போட்டோவிற்கு அவரே மாலை போட்டு வைப்பார். இந்தக் காட்சியை வைத்து மீம்ஸ் உருவாக்கியுள்ள கிரியேட்டர்கள், "இன்று சர்வதேச ஆண்கள் தினம்.. உனக்கெல்லாம் யார் விஷ் பண்ண போறாங்க.. நாமளே விஷ் பண்ணாதான் உண்டு" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த மீம்ஸ் நெட்டிசன்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.

ஆனால் ஒரு பொண்ணு கூட..
நாமதான் பெண்கள் தினத்திற்கு பெண்களுக்கு வாழ்த்த்து சொல்லுறோம். ஆனால் ஒரு பொண்ணு கூட நமக்கு ஆண்கள் தினம் அன்னைக்கு வாழ்த்து சொல்லுறது இல்லை.. என்று மீம்ஸ் போட்டு பகிர்ந்து இருக்கின்ற்னார்.

ஒருத்தராவது விஷ் பண்றாங்கலானு பாரு..
பஸ்சுக்குள் அடித்து பிடித்து பயணிகள் ஏறுவது போல் இருக்கும். ஆனால் ஒருவர் கூட பஸ் உள்ளே ஏற மாட்டார்கள். இதனை வடிவேலு இன்னும் ஒருத்தராவது உள்ளே வர்ராங்களானு பாரு என்று டையலாக் பேசுவார். அதை வைத்து "இன்னும் ஒருத்தராவது ஆண்கள் தினத்துக்கு வாழ்த்து சொல்றாங்களானு பாரு" என்று பதிவிட்டு மீம்ஸ் வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

ஆண்கள் என்றாலே தியாகிகள் தானே
சூரியன் படத்தில் இடம் பெற்றுள்ள கவுண்டமனி காமெடி காட்சியை வைத்து ஆண்கள் என்றாலே தியாகிகள் தானே என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர். இவ்வாறு பல்வேறு மீம்களை பதிவிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications