'முதல் மேட்சை சாமிக்கு விட்ருவோம்' சோஷியல் மீடியாவை டேக் ஓவர் செய்த சிஎஸ்கே.. மிரட்டும் மீம்ஸ்
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் உருவாக்கிய தரமான மீம்ஸை இங்கு பார்க்கலாம்.
ஆடுகளம் படத்தில் தனுஷ், "நாங்க தயார் பண்ணா சேவ தரமா தான் இருக்கும்னு ஊருக்கே தெரியுமே" என்று ரத்தினசாமியிடம் கூறுவார். இதில் தனுஷை மும்பை இந்தியன்ஸ் ஸ்கவுட்டாகவும், சேவலை விக்னேஷ் புத்தூராக மாற்றி, "நாங்க தயார் பண்ணா அந்த பிளேயர் தரமாதான் இருப்பார்னு ஊருக்கே தெரியுமே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

பூஜை படத்தில், அண்ணாச்சியால் கோபமடையும் சூரி, "எனக்கு வெறி அடங்கலடா" என்று மீண்டும் மீண்டும் அடித்து கொண்டே இருப்பார். இதில் சிஎஸ்கே அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட தீபக் சாஹரை சூரியாக மாற்றி, "எனக்கு வெறி அடங்கலடா" என்று பேட்டிங், பவுலிங் என்று வெளுத்து கட்டியதை வைத்து உருவாக்கிய மீம் வெறித்தனம்.

லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷ் களமிறங்கி முதல் பந்தை டொக்கு வைக்கும், ஓரமாக அமர்ந்திருக்கும் ஜென்சன், "என் மாப்புள்ள, முதல் பந்தை சாமிக்கு விட்ருவான்" என்பார். நேற்றைய ஆட்டத்தில் டக் அவுட்டான ரோஹித் சர்மாவை தினேஷாகவும், ஜென்சனை மும்பை ரசிகராகவும் மாற்றி, "எங்க அண்ணே முதல் மேட்சை சாமிக்கு விட்ருவாரு" என்று உருவாக்கப்பட்ட மீம் ஆள விடுங்கடா சாமி மொமெண்ட்.

ஐயா படத்தில் வடிவேலுவின் தியேட்டருக்கு போலி மேனேஜராக வரும் மதன் பாபு மாலை போடும் போது, "எனக்கு இதெல்லாம் பிடிக்காது" என்று தடாலடியாக கூறுவார். இதில் வடிவேலுவை சூர்யகுமார் யாதவாகவும், தோனியை மதன் பாபுவாகவும் மாற்றி, "கிரீஸை விட்டு வெளியே போனால் எனக்கு பிடிக்காது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கணிக்கவே முடியாத பைத்தியக்காரன்டா மொமண்ட்.

விக்ரம் வேதா படத்தில், போலீகாரராக வரும் ஒருவர், மணிகண்டனிடம், "இதுதான் வேதா" என்று மாஸாக ஒரு இண்ட்ரோவை கொடுப்பார். அதனை அப்படியே வேதாவாக ரோஹித் சர்மாவை மாற்றி, டக் அவுட்டானதை வைத்து, இதுதான் ஐபிஎல் ரோஹித் சர்மா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பல்தான்ஸ் பரம்பரை தாக்கப்பட்ட மொமண்ட்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications