ஒன்னு அசைவம்.. இல்ல அசந்து தூங்குவோம்! சன்டேவா.. அப்ப இன்னும் ஏன் முழிச்சுட்டு இருக்க.. SUNDAY MEMES
சென்னை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் நெட்டிசன்கள் புதிது புதிதாக யோசித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வகையில் தற்போது அவர்கள் வெளியிட்டு டிரெண்டாகி வரும் மீம்ஸ்களை பார்ப்போம்.
ஞாயிறு என்றாலே பலரும் ஓய்வெடுக்கும் நாளாகவே பார்த்து வருகிறார்கள். வாரம் முழுக்க ஓடி ஓடி உழைத்துவிட்டு ஞாயிறு விடுமுறையை உறக்கத்தில் கழிப்பவர்கள் ஏராளம். இதை மனதில் வைத்தே, "நீங்கள் இது ஞாயிறு காலை என்பதை அறிந்தால் இன்னும் அதிகமாக தூங்குவீர்கள்." என்று குறிப்பிட்டு மீம் வெளியிட்டுள்ளனர்.

இதே ஞாயிறு உறக்கத்தை மனதில் வைத்து மற்றொரு மீமும் டிரெண்டாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நாம் செய்வது இரண்டே வேலை. ஒன்று உறங்குவது. மற்றொன்று சாப்பிடுவது என குறிப்பிட்டு மீம்ஸ் தயாரித்து இருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையை உறங்கி கழிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தால் மறுபக்கம் அசைவம்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் மறுபக்கம் உள்ளனர். சில கிழமைகளில் எப்படி அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்களோ, அதேபோல் ஞாயிறு வந்துவிட்டால் அசைவம்தான் சாப்பிட வேண்டும் என அடம்பிடிப்பார்கள் இவர்கள்.

அதேபோல் ஞாயிறு அன்று கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதுவதாகவும், காய்கறிக் கடைகளில் கூட்டமே இல்லாதது போலவும் மீம்ஸ் தயாரித்து உள்ளார்கள்.
ஞாயிறு விடுமுறையை வாரம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் கடுப்பாகும் விசயம் என்னவென்றால் அது மிக வேகமாக ஓடி விடுகிறது என்பதே. இதை வைத்து ஏராளமான மீம்களை வெளியிட்டு உள்ளார்கள்.

ஞாயிறு முடிந்த மறுநாளே திங்கள் வந்துவிடுவது கடுப்பாக உள்ளதால் இடையே சப் சண்டே வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வடிவேலு மீம்ஸை வெளியிட்டு உள்ளார்கள் நெட்டிசன்கள்.
என்னடா கறி எடுத்துட்டு முடி வெட்டிட்டு வர்றதுக்குள்ள கிளம்பிட்ட என வடிவேலு ஞாயிற்றுக்கிழமையை பார்த்து கேட்பதைபோன்ற ஒரு மீமும் வலம் வந்துகொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்றும் கமிட்டட் ஆண்கள், தங்கள் காதலியை எங்கு அழைத்து செல்வது என்று யோசிப்பார்களாம். ஆனால், சிங்கிள் பசங்க மட்டும் இன்றைய சாப்பாடு சைவமா அல்லது அசைவமா என யோசிப்பார்களாம்.



-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications