ஒரு பப்ஸ் வாங்கி குடுத்தாலே ஓகே சொல்லிடுவா.. எதுக்கு ரோஸ்லாம் வாங்கி குடுத்துகிட்டு!
சென்னை : காதலர் தினத்தில் காதலைப் பற்றி மீம்ஸ்களைப் பகிர்வார்கள் என எதிர்பார்த்தால், காசு, பணம், துட்டு என விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் இந்த குறும்புக்கார நெட்டிசன்கள்.
கடந்த ஒரு வாரமாக காதலர்களை விட அதிக அலப்பறை செய்தது இந்த மீமர்கள்தான். காதலர்கள் தினமும் கொண்டாடும் ஒவ்வொரு தினத்தையும் வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து, இணையத்தையே காதலில் கமகமக்க வைத்து வந்தனர். இதனால் மற்ற நாட்களிலேயே இப்படியென்றால் காதலர் தினத்தில் கொண்டாட்டம் களை கட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம், இன்றும் காதல் ரசம் சொட்டச் சொட்ட நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் மீமர்கள். ஆனால் அதில் ஒரேஒரு வித்தியாசம் என்னவென்றால், அந்த காதல் மீம்ஸ்களில் காதலைவிட, காசு, பணம், துட்டு என மற்ற ரசங்கள் கொஞ்சம் தூக்கலாக உள்ளது.
"20 ரூவா பப்ஸ் வாங்கி குடுத்தாலே ஓகே சொல்லிடுவா.. எதுக்கு 80 ரூவா செலவு பண்ணி ரோஸ்லாம் வாங்கிகிட்டு!" என்றும், "இருக்க தங்கச்சிங்க பத்தாதுனு, அவகிட்ட என் லவ்வ சொல்லச் சொல்லி இன்னொரு தங்கச்சியை என் லிஸ்ட்ல சேர்க்கலாம்னு பார்க்குறியா?" என்பது மாதிரியான மீம்ஸ்கள் இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான காதலர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications