கொஞ்சம் நாள் வரலை.. அணில்ஸ்க்கு பயம் விட்டுப்போச்சு.. ரகளையான த்ரிஷா என்ட்ரி மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றியதை பார்க்க நடிகர் த்ரிஷா முன் வரிசையில் வந்து அமர்ந்திருந்தார். இதனால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஜாலியான மீம்ஸை பார்க்கலாம்.

காவலன் படத்தில் பேருந்தில் பயணிக்கும் ஒரு பெண், தன்னுடைய உறவினரை அழைத்து இருக்கையில் அமர அழைப்பார். அதனை தவறாக புரிந்து கொள்ளும் வடிவேலு, தன்னைத்தான் அழைக்கிறார் என்று நினைத்து பதில் அளிப்பார். அதில் வரும் வடிவேலுவாக எஸ்.ஏ.சந்திரசேகரையும், உறவினராக த்ரிஷாவயும் மாற்றி, விஜய் அண்ணா த்ரிஷாவுக்கு சல்யூட் வைத்ததை தன்னை பார்த்து சல்யூட் வைத்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் அப்பா பதில் சல்யூட் அடித்து பெருமையாக சிரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எப்புட்றா இப்படியெல்லாம் பிடிக்கிறீங்க ரகம்.

memes trisha vijay

வேல் படத்தில் சித்தப்பா மீது சட்னியைகொட்டும் சூர்யா, பெரிய சித்தி வச்ச தக்காளி சட்னி சிவப்பு கலரு.. சின்ன சித்து வச்ச புதினா சட்னி பச்சை கலரு.. சித்தப்பா மனசு போலவே சட்டசை வெள்ளை கலரு.. தேசிய ஒருமைப்பாட்டையே பார்க்கிறேன்டா குழந்தைசாமி என்பார். அதனை அப்படியேறி மாற்றி த்ரிஷா மஞ்சள் சேலையிலும், எஸ்ஏசி வெள்ளை சட்டையிலும், ஷோபா பச்சை சேலையிலும் வந்ததை தேசிய ஒருமைப்பாடு என்று தவெகவினர் சொல்லுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கடா கொய்யால ரகம்.

memes trisha vijay

கருப்பு படத்தில் சூர்யா காரில் இருந்து இறங்கி, "கொஞ்சம் நாள் இல்ல.. பயம் விட்டுப் போச்சு" என்பார். அதில் வரும் சூர்யாவாக த்ரிஷாவை மாற்றி, கொஞ்சம் நாள் இல்ல.. அணில்-க்குலாம் பயம் விட்டுப் போச்சு என்று சொல்வதாக சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அந்த பயம் இருக்கணும்டா ரகம்.

memes trisha vijay

எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலு எதிர்க்கட்சித் தலைவரை மேடையில் வைத்து விளாசுவார். அப்போது கூட்டத்தை உடைத்து கொண்டு ஒருவர் சைக்கிளில் அரிவாளுடன் வர, வடிவேலு ஆதரவாளர்கள் சேருடன் 10 அடி பின் நகர்வார்கள். அதில் வரும் வடிவேலு ஆதரவாளர்களாக தவெகவினரை மாற்றி, த்ரிஷா வந்த பின் 10 அடி சுதந்திர தின விழாவில் இருந்து பின்னாடி நகர்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆத்தி இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே ரகம்.

memes trisha vijay

திமிரு படத்தில் தன்னுடைய கூல்ட்ரிங்ஸை சிங்கமுத்து திருடி குடிப்பதாக நினைத்து, அட பொழப்பத்த பயலுகளா என்று திட்டுவார். அதில் வரும் சிங்கமுத்துவை கோர்ட் போட்ட விஜய்யாக மாற்றி, அடப்பாவிகளா.. இந்த வேலைக்கு என்று த்ரிஷாவின் புகைப்படத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் இன்னும் என்னலாம் பண்ண காத்துருக்காங்களோ ரகம்.

memes trisha vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+