"எட்டு திக்கும் கொடி பறக்குது மம்பட்டியான்" ஜாலி மோடில் மும்பை பல்தான்ஸ்.. தெறிக்கும் மீம்ஸ்!
மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் மும்பை அணியின் ரசிகர்கள் உருவாக்கியுள்ள அலப்பறையான மீம்ஸை பார்க்கலாம்.
வேதாளம் படத்தில் ரவுடி கூட்டத்திடம் மாட்டிக் கொள்ளும் அஜித்திடம், 'ஏய்.. நாங்கள் மொத்தம் 40 பேரு.. நீ ஒத்த ஆளு.. அடிக்கிறதுனா ஒரு பிளான் வேணும்" என்பார். அதற்கு அஜித், "தமாஸு.. தமாஸு.. அடிக்கிறது தான்டா பிளானே" என்று வெளுப்பார். அதில் வரும் ரவுடி கூட்டமாக குஜராத், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணியை மாற்றி, "நாங்க 3 பேரு.. நீ ஒத்த ஆளு.. அடிக்கிறதுனா ஒரு பிளான் வேணும்" என்று சொல்ல, அதற்கு அஜித்தாக மும்பை அணியை மாற்றி, "தமாஸு.. தமாஸு.. அடிக்கிறது தான்டா பிளானே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.

வடசென்னை படத்தில் ராஜனாக வரும் அமீர் ராதாரவியிடம், "முத்து அண்ணா.. சொல்லி வை.. மத்தவங்களை மாதிரி பேப்பர் ரவுடி இல்ல நான்" என்று மாஸாக மிரட்டுவார்.. அதில் வரும் ராஜனான அமீரை 43 பந்துகளில் 73 ரன்களை விளாசிய சூர்யகுமார் யாதவாக மாற்றி, "பேப்பர் ரவுடி இல்லடா நான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இனிமே இங்க நான்தான் ரங்கராய சக்திவேல் மொமண்ட்.

கைதி படத்தில் வில்லனான அர்ஜுன் தாஸ், "அந்த 6 போலீஸ்காரர்களை தலையை எடுப்பவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்டுடா" என்று பணத்தை வாரி இரைப்பார். அதில் வரும் அர்ஜுன் தாஸாக மும்பை ரசிகர்களை மாற்றி, "சான்ட்னரை விட அண்டர்ரேட்டட் பிளேயரை காட்டுறவனுக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட்டுடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வொர்த் வர்மா மொமண்ட்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிக்குமார், அவரது இரு மகன்கள் இணைந்து, "தொட்டாலே தூள் பறக்கும் மம்பட்டியான்.. அட மம்பட்டியான்" பாடலுக்கு டான்ஸ் ஆடி உற்சாகமாக இருப்பார்கள். அதனை அப்படியே மாற்றி சசிக்குமார் மற்றும் இரு மகன்களை மும்பை ரசிகர்களாக மாற்றி, "போட்றா பாட்ட.. தொட்டாலே தூள் பறக்கும் அட மம்பட்டியான்.. அட மம்பட்டியான்" என்று ஜாலியாக டான்ஸ் ஆடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் மொமண்ட்.

களவாணி படத்தில் நாயகியிடம் இருந்து போன் வரும் போது, நாயகன் விமல் மாட்டுவண்டியை அப்படியே விட்டுவிட்டு போய்விடுவார்.. அப்போது வண்டியில் உள்ள இரு பெண்களும், "அடியேய்.. இவன் போன் எடுத்துட்டு போனா.. திரும்ப வர மாட்டானேடி" என்று சொல்வார்கள். அதில் வரும் பெண்களாக குஜராத் மற்றும் ஆர்சிபி அணியை மாற்றி, விமலாக மும்பை அணியையும் மாற்றி, "ஐயயோ.. இவன் பிளே ஆஃப் வந்துட்டா கப் அடிக்காம போக மாட்டானேடி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications