செல்பி எடுப்பது பிடிக்கலைன்னா தட்டி விடக் கூடாது.. குணமா சொல்லோணும்..! #சிவக்குமார்
Recommended Video

சென்னை: செல்பி எடுப்பது பிடிக்கலைனா தட்டிவிடக் கூடாது, குணமா சொல்லோணும் என்று நெட்டிசன்கள் நடிகர் சிவக்குமாரை வாரி வருகின்றனர்.
மதுரையில் ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவுக்கு சென்றார் நடிகர் சிவக்குமார். அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் அந்த செல்போனை தட்டிவிட்டதில் போன் கீழே விழுந்தது. இதனால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் யோகாவை தன்உயிர் மூச்சாக கருதும் சிவக்குமார் இப்படி கோபப்படலாமா என கேட்டு நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
[செல்பி எடுக்க முயன்ற ரசிகர்.. செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்]
|
சிவக்குமார்
உண்மையில் யோகா தியானம் எல்லாம் பண்ணாலும் கோவத்தை கன்ட்ரோல் பண்ண முடியாதுன்றதுக்கு சிவக்குமார் ஓர் வாழும் எடுத்துக்காட்டு.
|
பாவம் அந்த பையன்
பொது இடங்களில் செல்பி எடுப்பது சகஜம் தானே பின்னே ஏன் கோவப்படுறாரு ..
பாவம் அந்த பையன்
|
நினைக்கவில்லை
உங்கள் அப்பாவிடம் இருந்து இதுபோன்ற ஒரு செய்கையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் சரிதான் என நினைக்கிறீர்களா சூர்யா. ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை.
|
செல்பியா எடுக்கற செல்பி
சிவகுமார் : செல்பியா எடுக்குறே செல்பி
|
பொது இடங்களில்
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் இவர் செய்த செயல் சரியா பொது இடங்களில் தன் மரியாதையை இழந்தார்.
|
தூக்கி வீசமா குணமா சொல்லனும்
சிவகுமார் : இப்படி குறுக்க மறுக்க வந்து செல்பி எடுக்குறது தப்பு தானே..
தட்_காய் : தப்புதான் அதுக்கு செல்போன தட்டிவிடாம, தூக்கி வீசாம
குணமா வாய்ல சொல்லனும்...
|
மைக்க அந்த தம்பி கிட்ட கொடுங்க
யோகா செய்தால் மன அமைதி கிடைக்கும் மற்றும் மிருக குணங்கள் எட்டிப்
பார்க்காது! - #நடிகர்_சிவகுமார்
அந்த மைக்க அப்படியே அந்த செல்பி எடுத்த தம்பி கிட்ட கொடுங்க
|
வாழ்க்கையில்
கோபத்தை கட்டுப்படுத்த #யோகா முக்கியம்.சிவகுமார் சாரே...யோகா செய்யுறது முக்கியமில்லை அதை வாழ்க்கையில் நடைமுறைபடுத்துறது தான் முக்கியம்.
|
பாவம்தான்
#சிவக்குமார் எதோ அந்தரங்கத்தை எடுத்த மாதிரி கோவப்படறாப்ல...
பாவம் தான் சூர்யா, கார்த்தி..
|
சொல்
ஒருவர் செயல் அவர் சொற்களை விட வலிமையாக பேசும்.
நடிகர் சிவக்குமார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications