ஒரு நிமிஷம் தலை சுத்திட்டு.. ரஜினியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்.. வைரலான #ரஜினிக்கு_தெரியாது!
நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக இணையத்தில் #ரஜினிக்கு_தெரியாது என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக இணையத்தில் #ரஜினிக்கு_தெரியாது என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த, யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
[7 பேரா? எந்த 7 பேர்.. ஒரே பேட்டி.. மொத்தமும் க்ளோஸ்.. நீங்க அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி!]

ரஜினிக்கு தெரியாது
ரஜினியின் இந்த பதிலை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் கனவில் இருக்கும் ஒருவர் இப்படியா பதில் சொல்வது, தமிழகத்தின் பல வருட பிரச்சனையாக உள்ள விஷயம் குறித்து கூடவா தெரியாமல் இருப்பது என்று எல்லோரும் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் #ரஜினிக்கு_தெரியாது என்று இணையத்தில் ஹேஷ்டேக் உருவாக்கி வைரலாக்கி உள்ளனர்.
|
அன்னைக்கு என்ன சொன்னீங்க
இவர் ரஜினி முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பேசியதை வைத்து கிண்டல் செய்துள்ளார். நேற்று ரஜினி அளித்த பேட்டியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பேசினார்.
|
தலை சுத்திட்டு
இவர் ''அந்த 7 பேரு விடுதலைனு சொன்னதும் அப்படியே ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சி😇😂😂'' என்று கிண்டல் செய்துள்ளார்.
|
நான் பாட்டுக்கு இருந்தேன்
இவர் ''ரஜினி நவ்: நான் பாட்டுக்கு சிவனேன்னுதான்யா ஏர்போர்ட்ல போயிக்கிட்டு இருந்தேன், அந்த 7 பேர்னு பத்தி கேட்டு, என்னோட அரசியல் அறிவை வெட்ட வெளிச்சமாக்கி ஏழரைய இழுத்து விட்டிங்களேய்யா 😥'' என்றுள்ளார்.
|
எதுவும் தெரியல
பாருங்க என் செல்லத்துக்கு ஒன்னும் தெரியல என்று கிண்டல் செய்துள்ளார்.
|
ஓடிடுங்க
இவர் ரஜினிகாந்த் ரைட் நவ் என்று மீம் போட்டுள்ளார்.
|
தெரியாது தெரியாது
தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டம் தெரியாது! தமிழ்நாட்டின் தலைநகரம் என்ன தெரியாது! நீங்க எப்போ கட்சி ஆரம்பிப்பீங்க அது ஆண்டவனுக்கு தான் தெரியும்! எனக்கு தெரியாது! உங்களின் பெயர் என்ன அட சத்தியமா தெரியாது பா! என்று கிண்டல் செய்துள்ளார்.
|
யார் அவங்க
இவர், ஏம்பா ரஜினி அந்த 7 பேர்..எந்த 7 பேர்.. 7 பேர் விடுதலை..எந்த 7 பேர்.. என்றுள்ளார்.
|
இப்போது இப்படித்தான்
இவர் ''விமான நிலையத்தில் தோழர் ரஜினி தற்பொழுது.. 😭 #ரஜினிக்கு_தெரியாது'' என்று கிண்டல் செய்துள்ளார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications