கன்டென்ட் கொடுக்குறத நிறுத்துங்க.. அமைச்சர் ஜெயக்குமார் கதறலுக்கும் பறக்கும் டுவீட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : செய்தியாளர்கள் சந்திப்பில் தான் என்ன சொன்னாலும் அதை வைத்து மீம்ஸ் போடவே ஆட்களை வைத்துள்ளார்கள் சிலர் என்று அமைச்சர் ஜெயக்குமார் நொந்துகொண்டார். ஆனால் இதற்கும் பலர் மீம்ஸ்களையும் நெட்டில் பறக்க விடுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நான் பத்திரிகையாளர்களிடம் பேசிய செய்தி வந்தவுடன் அதை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். எப்படி கிண்டல் அடிக்கலாம், மீம்ஸ் போடலாம் என இதற்காகவே தனியாகவே சம்பளம் கொடுத்து ஆட்களை வேலைக்கு வைத்து இருக்கிறார்கள் என்றார்.

ஸ்டாலின், தினகரன் மற்றும் இன்னொரு தரப்பு என மொத்தம் மூன்று கும்பல்கள் இதைச் செய்து வருகின்றனர். என்ன பேசினாலும் அதை வைத்து தவறாக மீம்ஸ் போடுவது, கிண்டல் அடிப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆதங்கப்பட்டிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

போங்க பாஸ்

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்தையும் வைத்தும் டுவிட்டரில் சில மீம்ஸ்களும் நக்கல் கருத்துகளும் உலா வருகின்றன. மழை குறித்து நான் என்ன சொன்னாலும் மீம்ஸ் போடுகிறார்கள் என்று அமைச்சர் ஆதங்கப்படுகிறார். ஆனால் இப்ப அவரு இதச் சொன்னதுக்கே மீம்ஸ் போட ஆரம்பிச்சிருப்பானுவ என்று வடிவேலு மாதிரி வருத்தப்படுகிறார் இவர்.

முதல்ல நீங்க நிறுத்துங்க

வேலை இல்லாதவர்கள் மீம்ஸ் போடுகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதை நாயகன் பட பாணியில் கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன். முதல்ல அவங்கள கன்டென்ட் கொடுக்குறத நிறுத்தச் சொல்லுங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம் என்று கிண்டலடிக்கிறார் இவர்.

அமைச்சருக்கே கேள்வி?

அமைச்சர் சொல்வது எல்லாம் நியாயம் தான். ஆனா நீங்க ஏன் மீம்ஸ் போடுற மாதிரி பேசுறீங்க என்று கேட்டுள்ளார் வாசகர் ஒருவர்.

கோடி பேரு லைக் பண்றாங்களே அவங்களயா?

அமைச்சர் ஜெயக்குமாருக்கே இந்த மீம் கிரியேட்டர் ஒரு கேள்வி கேட்டு பதிலையும் போட்டுள்ளார். வேலையில்லாதவங்கன்னு சொல்றீங்களே லட்சம் பேரு மீம் கிரியேட்டரா இருந்தாலும் கோடி பேரு லைக் பண்றாங்களே அவங்களயா சொல்றீங்க. பூரா பேரும் படிப்பறிவு இல்லாதவங்க தம்பின்னு ஜெயக்குமார் பதில் சொல்வது போல இந்த மீம் கிரியேட் செய்யப்பட்டிருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens trolling Minister Jayakumar as he says that whatever he say to media it is being trolled by meme ccreators, for this too many memes roaming in twitter handle.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற