2022.. நியூ இயர்.. பார்ட்டி.. சரி, நீங்க கோட்டுக்கு அந்த பக்கமா.. இல்ல இந்த பக்கமா?
புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மதம், இனம் என எதுவும் பார்க்காமல் பெரும்பாலானோர் கொண்டாடும் ஒரு நாள் ஆங்கிலப் புத்தாண்டு தான். புதிதாக பிறக்கப் போகிற ஆண்டாவது நமது கஷ்டங்கள் தீர்ந்து, புதிய வாழ்க்கை துளிர்விடாத என்ற ஏக்கத்தில் அன்றைய தினத்தை சந்தோசமாகக் கொண்டாட விரும்புகிறார்கள் மக்கள்.

வழக்கமாக புத்தாண்டு பிறக்கின்ற நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு பார்ட்டிகள் களை கட்டும். ஆனால் கொரோனா பிரச்சினையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் எதிர்பார்த்தபடி இல்லை. இருந்தபோதும் பழைய ஞாபகத்தில் புத்தாண்டு பார்ட்டி பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் மக்கள். அதில் கொண்டாட்டங்கள் பற்றிய எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது, ஆனால் நிஜத்தில் எப்படி இருக்கிறது என ஒப்பீட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
Recommended Video



Click it and Unblock the Notifications
