இனி கோ டூ பாகிஸ்தான்னு சொல்ல முடியாதே.. இந்தியா பேரை அவங்க வச்சா கடுப்பா இருக்கே.. மீம்ஸ்
சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய மத்திய அரசு சட்ட திருத்த மசோதா கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பாகிஸ்தான் அந்த பெயருக்கு உரிமை கோர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி பாகிஸ்தானின் பெயர் இந்தியா என மாறினால் எப்படி இருக்கும் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.
இந்தியா என்கிற பெயரில் எங்களுக்கும் உரிமை உள்ளது, அந்த பெயரை வைத்துக்கொள்ள உரிமை கோருவோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில் இந்தியாவிற்கு எதிராக பேசுபவர்கள் கோ டூ பாகிஸ்தான் என்று சொல்ல முடியாது என்பது பெரும் கவலை.

இந்தியா என்கிற பெயரில் எங்களுக்கும் உரிமை உள்ளது, அந்த பெயரை வைத்துக்கொள்ள உரிமை கோருவோம் - பாகிஸ்தான்.
ஜீ ~ நினைச்சி பாரேன், நம்ம பேர அவங்க வச்சா எப்டி இருக்கும்ன்னு. "Go to Pakistan" ன்னு சொல்ல முடியாது, "Go to india" ன்னு சொல்லணும்,
பாரதத்திற்கும், இந்தியாவுக்கும் கிரிக்கெட் மேட்ச், காஷ்மீர் எல்லையில் அத்து மீறிய இந்திய ராணுவ வீரர்கள்.. கடுப்பா இருக்கே என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இந்தியா ஆபத்துல இருக்கு" அதனால எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு ஆட்சிக்கு வந்தாங்க, இப்போ "இந்தியா"ங்குற பேரே ஆபத்தா இருக்கு, அதனால பேர மாத்துறோம், எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு வந்து நிக்குறானுங்க..!! என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.

இதை எல்லாம் விட அஇஅதிமுக என்ற கட்சியின் பெயரையே மாற்ற வேண்டுமோ என்று யோசிக்கிறார் இந்த நெட்டிசன். அய்யா கட்சி பேரை அகில பாரத திராவிட முன்னேற்ற கழகம்ன்னு மாத்தி கொடுங்கயா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன். இதே கேள்வியை திமுகவின் ஐடி விங் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல் INDIA is a Union of States என்று திமுக ஐடி விங் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
https://twitter.com/arulanand_slm/status/1699036088978071890
இனி இந்தியா பாரத் என்று அழைக்கப்பட்டால் இந்தி மொழி பாரத்தி என்று அழைக்கப்படுமா? என்று சந்தேகம் எழுப்பியுள்ளார் இந்த நெட்டிசன்.

கடந்த காலங்களில் மாநிலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டது. நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. மெட்ராஸ் சென்னை என மாற்றப்பட்டது. கல்கத்தா என்ற பெயர் கொல்கத்தா எனவும் மைசூர், பெங்களூர் நகரங்கள் மைசூரு, பெங்களூரு எனவும் மாற்றப்பட்டன. கேரளா மாநிலம் கேரளம் என்று சமீபத்தில் மாற்றப்பட்டது. இப்போது நாட்டின் பெயரே மாறப்போகிறது. பாரத் என்ற பெயர் பல நூற்றாண்டு காலமாகவே இருக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர் பாஜக அபிமானிகள்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications