எங்க ஓட்டு மட்டுமல்ல விஜய் ரசிகர்கள் ஓட்டும் ரஜினிக்கே... பாசிடிவ் எனர்ஜி தரும் நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்தால் எங்கள் ஓட்டு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களின் ஓட்டையும் அவருக்கே போட வெச்சிடுவேன்னு பாசிடிவ் எனர்ஜி பாய்ச்சுகின்றனர் நெட்டிசன்கள். ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டரில் வலம் வரும் சில சுவாரஸ்ய டுவீட்டுகளின் தொகுப்புகள் இதோ.

  நடிகர் ரஜினிகாந்து தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ல் தெளிவுபடுத்த உள்ளதாக கூறியுள்ளார். ரஜினியின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வந்தாலும், டுவிட்டரில் பலர் பாசிடிவ் எனர்ஜியையும் பாய்ச்சி வருகின்றனர்.

  ரஜினி வருவார் என்று சொல்வார் வரமாட்டார். அவரிடம தெளிவு இல்லை என்று சொன்னவர்களுக்கெல்லாம் இன்றைய ரஜினியின் தெறிக்கும் பேச்சு ஒரு தெளிவைத் தந்திருக்கும். ரஜினிக்கு ஆதரவாக அணி திரளும் டுவீட்டுகள்.

  விஜய் ரசிகர்கள் ஓட்டும் ரஜினிக்குத் தான்

  ரஜினி அரசியலுக்கு வந்தால் எங்கள் ஓட்டு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களின் ஓட்டையும் அவருக்கே போட வெச்சிடுவேன். விஜய் ரசிகர்கள் நண்பர்கள் ஓட்டையும் அவருக்கே போட வச்சிருவேன் என்று குஷியாகியுள்ளார் இவர்.

  அருமையான மீம்

  தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று தான் ரஜினி கூறி இருக்கிறார். ஆனால் அதற்குள் ரஜினி டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வரப்போறாரு என்று சிலர் கூப்பாடு போட்டு வருகின்றனர், அவர்களை கிண்டல் செய்யும் விதமாக இந்த நெட்டிசன் ஒரு அருமையான மீமை தட்டிவிட்டுள்ளார்.

  எந்த டிசம்பர் 31 தலைவா?

  டிசம்பர் 31 அன்று எனது அரசியல் நிலைப்பாட்டினை அறிவிப்பேன் என்று ரஜினி கூறி இருக்கிறார். அப்படியே எந்த வருஷம்னு சொல்லிட்டு போங்க தலைவா...! என்று டுவீட்டியுள்ளார் இவர்.

  மெயின் பிச்சரை பாருங்க

  ரஜினி வரக்கூடாதுன்னு கதறியே சாவ வேண்டியதுதான் எதிர்ப்பாளர் கூட்டங்கள். 26 தேதியே இப்டி அழுவுறீங்க இது சும்மா ட்ரெயிலர்தான் மெயின் பிக்சர் 31 தேதி இருக்கு அதுவர உயிரோட இருங்கடா. தலைவா வா தலைமையேற்க வா

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth's speech in today's fans club meeting has evoked mixed response from the Netizens. Many have criticized and many have extended their support to the Actor.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற