For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா.. டெங்கு.. வடிவேலு மீம்ஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    dengue awareness vadivelu version memes

    சென்னை: அங்கங்கு டெங்கு காய்ச்சலால் குழந்தைகளும் பெரியவர்களும் பெரும் துன்பப்பட்டு வருகிறார்கள்.உயிரிழப்பும் கூட ஏற்பட்டு வருவதாக கணக்கெடுப்பு சொல்கிறது.

    கல்யாண வீடுன்னாலும், எழவு வீடுன்னாலும் மேளம், டான்ஸுன்னு சூழ்நிலையை கலகலப்பாக்கி விடுவார்கள் மக்கள்.

    அப்படித்தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடிகளை எதற்கு வேண்டுமானாலும் மீம்ஸ் கிரியேட் பண்ணி கலாட்டா பண்ணிவிடுவார்கள்.

    வடிவேலு மீம்ஸ்

    வடிவேலு மீம்ஸ்

    டெங்கு ஜுரம் பரவலாக கோலோச்சிக் கொண்டு இருக்க, வருஷா வருஷம் மக்களுக்கும் இதுக் குறித்த விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டே இருக்கத்தான் வேண்டி உள்ளது. சும்மா ஸ்கூல் பசங்களுக்கு படம் எடுக்கற மாதிரி இந்த விழிப்புணர்வை சொன்னால் ஈடுபடாதுன்னு மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தெரிஞ்சு போச்சு.

    வடிவேலு வசனம்

    வடிவேலு வசனம்

    வடிவேலுவின் படங்களில் இருந்து அவர் பேசும் சில வசனங்களை டெங்கு விழிப்புணர்வுக்கு ஏற்ப புகுத்தி இந்த விழிப்புணர்வு மீம்ஸை கிரியேட் செய்து இருக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது... பாராட்ட வேண்டிய விஷயம்தான். வடிவேலுவின் பல படங்களின் காட்சிகளை எடுத்து டெங்கு விழிப்புணர்வை சொல்லி இருக்கிறார்கள்.

    கவுண்டமணி சார்

    கவுண்டமணி சார்

    முதலில் அறிகுறிகளை சொல்ல தலை வலிக்குதுன்னு போற வடிவேலு, பிறகு இரெண்டாம் புலிகேசி படத்தில் ஜுரம் அடிக்கிறதா என்று கேட்பது. அடுத்து வயிற்றுப்போக்கு என்று டாய்லெட்டில் உட்காருவது...மூக்கில் ரத்தம் வருவது... இப்படி பல அறிகுறிகள்.

    கஷாயம் குடிங்க

    கஷாயம் குடிங்க

    நில வேம்பு கஷாயம் குடிங்க. டாக்டர்கள் கொடுக்கும் மாத்திரைகளை எடுத்துக்கோங்க.. ஒய்வு எடுங்க..கொசு அண்டவிடாமல் பாத்திரங்களில் பழைய தண்ணீரை வைக்காதீங்க என்று அத்தனைக்கும் வடிவேலு நடிச்ச படம்தான்.

    சேவைகள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

    சேவைகள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

    கடைசியாக நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடான்னு கவுண்டமணி சொல்வதில் முடிச்சு இருக்காங்க. இப்படியான விழிப்புணர்வு பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். மீம்ஸ் கிரியேட்டர்ஸ்..மக்களிடம் விரைவாக சென்று அடையும். இந்த மாதிரி சேவைகளை செய்யுங்களேன்!

    English summary
    Tamil Nadu: Children and adults are suffering from dengue fever. That is how comedian Vadivelu's comedies would make memes creative.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X