ஹிட் அடிச்சா கொசு காலி.. ஹிட்மேன் அடிச்சா பவுலர்கள் காலி.. தெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    WORLD CUP 2019 IND VS SA | 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

    சென்னை: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி நேற்று தென் ஆப்பிரிக்காவை அற்புதமாக வீழ்த்தி, முதல் போட்டியிலேயே முத்திரை வெற்றியை பெற்றது.

    ரோகித் ஷர்மாவின் சதமும், முன்னதாக சுழற்பந்து வீச்சாளர் சஹல் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், இந்திய அணியின் வெற்றிக்கு அடிக்கோடிட்டன.

    உலக கோப்பை துவங்கி ஒரு வாரம் ஆன பிறகுதான், இந்தியா தனது முதல் போட்டியில் களமிறங்கியது. இந்தியா வந்த பிறகு உலக கோப்பை களம் சூடு பிடித்துள்ளது. சிங்கம் கானகத்திற்குள் வந்ததும், சிறுத்தைகள் முதல் சிறு நரிகள் வரை, அச்சத்தில் அலறி ஓட்டம் பிடிக்குமே, அதுபோல, பிற அணிகள் நடுங்கத் தொடங்கிவிட்டன என குதூகலிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.

    இந்திய அணியின் முதல் வெற்றியையும், வீரர்களின் ஆட்டத்தையும் பாராட்டி, உலவும் சில மீம்களை நீங்களே பாருங்கள்.

    வந்தாச்சுல்ல

    வந்தாச்சுல்ல

    எதிராளிகள் கூட்டத்திற்குள், விஜய் கதாப்பாத்திரம் என்ட்ரி கொடுக்கும், சர்கார் திரைப்பட காட்சியை, வைத்து, இந்திய அணியின் வருகையை வாழ்த்தியுள்ளார்கள் பாருங்க.

    ரோகித் அபாரம்

    ரோகித் அபாரம்

    நடப்பு, உலக கோப்பையின், முதல் போட்டியிலேயே, சூப்பர் சதம் விளாசி, கடைசி வரை களத்தில் நின்ற ரோகித் ஷர்மாவை, விஸ்வாசம் திரைப்பட அஜித் கதாப்பாத்திரத்தோடு இணைத்து சிலாகிக்கிறது இந்த மீம்.

    செம என்ட்ரி

    செம என்ட்ரி

    மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இதுவரை ஆடிய ஆட்டங்களில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தியதாக புகழப்பட்ட நிலையில், கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளது இந்தியா.

    நீங்களுமா

    நீங்களுமா

    வங்கதேசம் மோசமான டீம்ப்பா.. அடிச்சிபுட்டாங்கன்னு சொன்ன, தென் ஆப்பிரிக்காவை, நாங்க அதைவிட மோசமான டீம் என்று சொல்லி வெளுத்து வாங்கியுள்ளது இந்தியா.

    ஹிட்மேன்

    ஹிட்மேன்

    ஹிட் அடிச்சா ஒரு கொசுவும் தப்பிக்காது. அந்த மாதிரி, ஹிட்மேன் ரோகித் அடிக்க ஆரம்பிச்சா, எந்த பவுலரும் தப்பிக்க முடியாது என்று சொல்கிறது இந்த மீம். சபாஷ், கலக்குங்க மக்கா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+