வெங்காயம்.. உஷாரய்யா உஷாரு.. இந்த வீடியோல இருக்கற மாதிரி நடந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல பாஸ்!
சென்னை: சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்ற பேதமில்லாமல் எல்லா வெங்காயத்தின் விலையுமே எகிறித்தான் கிடக்கிறது.
வெங்காய விலை உயர்வை வைத்து மீம்ஸ்களும், ட்ரோல்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அப்படி இருக்கையில் இப்போது உச்சத்தில் டிக் டாக்கை மட்டும் விட்டு விடுவார்களா?

அதிலும் வெங்காயம் தொடர்பான பல வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. சமூகவலைதளங்களில் அவை தான் இப்போது அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. இதோ நம் கண்ணில் பட்ட நான்கு வீடியோக்கள்...
1. இந்த வீடியோவில் தங்கத்தை லாக்கரில் வைத்து பூட்டுவது போல, வெங்காயத்தை பூட்டி வைத்திருக்கிறார் இந்த பொறுப்பான கணவர். பாவம் மனைவி தயங்கித் தயங்கி வெங்காயம் கேட்கிறார். கணவரும் எண்ணி எண்ணி வெங்காயத்தைத் தருகிறார்.
2. பண்டிகை காலங்கள் வந்தாலே உங்கள் மனைவிக்கு அழகழகான ஆபரணங்களை பரிசாகக் கொடுங்கள் என்ற விளம்பரத்தை டிவியில் பார்த்திருப்போம். இது அதில் புது ரகம். இவர் காலத்துக்கு தகுந்த மாதிரி ஆபரணப் பெட்டியில் வைத்து வெங்காயம் பரிசாகத் தருகிறார்.
3. வெங்காயம் போடாவிட்டால் சாப்பாடு ருசிக்காது. இது நம் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் வெங்காயத்தை சம்பிரதாயத்திற்கு பாத்திரத்தின் மேலே காட்டி விட்டு, மீண்டும் பத்திரப் படுத்தி விட்டார் இந்தப் பெண்மணி. சமத்து தான்.
4. இந்த வீடியோவிலும் வெங்காயத்தை பீரோவில் வைத்து தான் பூட்டி இருக்கிறார்கள். ஆனால் அத்தை, மருமகளா இல்லை அம்மா, மகளா எனத் தெரியவில்லை. இளம் பெண் கெஞ்சிக் கேட்டும் கறாராக திரும்ப வெங்காயத்தை தர மறுத்து விட்டார் அந்த பெரியம்மா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications