இன்னும் எத்தனை பேர் பொழப்ப கெடுக்க போறீங்களோ! சாபம் விடும் TTF வாசனின் ஆர்மி! தெறிக்க விடும் மீம்ஸ்!
சென்னை : புயல் வேகத்தில் வண்டியை ஓட்டி யூட்யூப்பில் பேமஸாகி, பிறந்தநாள் பார்ட்டியால் வைரலான டிடிஎஃப் வாசன் தற்போது அதே பிறந்தநாள் பார்ட்டி மற்றும் தான் வெளியிட்ட வீடியோவால் சிக்கலில் சிக்கியுள்ளார். இதுகுறித்து மீம்ஸ்கள் தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
கோவையைச் சேர்ந்த பிரபல பைக் ஆர்வலரும் யூட்யூபருமான டிடிஎஃப் வாசன் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு குறித்த பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
நடிகர்களை விட சாதாரண ஒரு பைக் ரைடருக்கு ஏன் இவ்வளவு கூட்டம் என்பது குறித்தான விவாதங்கள் எழுந்துள்ளது. எதற்காக இளைஞர்கள் குறிப்பாக 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார்கள் கிளம்பிய நிலையில், டிடிஎஃப் வாசன் மீதான புகார் 'நோட்' செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை கூறியுள்ளது. இதனையடுத்து பலரும் மீம்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சில மீம்ஸ்கள் உங்களுக்காக..
முதலில் பருத்திவீரன் படத்தில் மிகவும் புகழ்பெற்ற செவ்வாழை கேரக்டரை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாடு வாங்க செல்லும் கஞ்சா கருப்புவை போலீசார் எங்க போற என கேட்க நாண்டுகிட்டு சாக எனக் கூறுவார். அதை வைத்து உருவாக்கிய மீன் தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.

அடுத்ததாக டீக்கடையில் டீ குடிக்க செல்லும் பருத்தி வீரன், சித்தப்பு, நீங்க ஓனர் இல்லையா கேட்க கஞ்சா கருப்புவை வெளியேற்றி விடுவார்கள். இப்ப சந்தோஷமா என கேட்டும் வசனத்தை, வாசன் கேட்பது போல் இந்த மீம் பரவி வருகிறது.

'அடுத்ததாக டாக்டர் படத்தில் வரும் எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பாத்தியா' இதுதான் அல்டிமேட் எங்கின்றனர் இணையவாசிகள்

வாசனை கைது செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் வக்கீல் வண்டு முருகனின் அல்லக்கை கேரக்டர், முடிந்தால் என் அண்ணனை கைது செய்து பார் என கேட்பது போல் இருக்கும் மீமும் நல்லா இருக்க்கு... நல்லாத் தாங்க இருக்கு.

கோவையில் ரசிகர்களுக்கு சந்திப்புக்கு பிறகு தான் இவ்வளவு சர்ச்சை என்பதை கூறும் வகையில் ஒரே ஒரு மீட் அப் டோட்டல் லைஃபும் க்ளோஸ் என வடிவேல் சொல்வது அல்டிமேட் ரகம்

ரசிகர்கள் சந்திப்பின்போது வாசனின் ஹெல்மெட் மற்றும் பரிசு பொருட்கள் காணாமல் போனதை விவேக்கின் திருப்பதி ஜிலேபி காமெடி எவர்கிரீன் டெம்ப்ளேட்டான "பாஸ் அடுத்து எப்ப மீட் ஆப் வைப்பீங்க, எதுக்குடா தங்கம்? உங்க பைக் எனக்கு வேணும்.. இதுதான் கமெடியின் உச்சம்

-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications