ஆண்களே! வரதட்சிணையாக தங்கம் வேண்டாம்... தக்காளி கேளுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளியின் உற்பத்தி குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தக்காளி விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையை கேட்டால் அதை உரிப்பதற்குள் கண்ணீல் இருந்து தண்ணீர் வந்துவிடும். அந்த அளவுக்கு விலையேற்றம் உள்ளது. நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றுள் சில உங்களுக்காக...

வரதட்சியணையா தக்காளி கேளுங்க

2 வாரமாக தக்காளியின் விலை ரூ. 120 என்ற செய்தித்தாளின் செய்தியை சுட்டிக் காட்டி, இனிமேல், வரதட்சணையா எவ்ளோ #தங்கம் போடுவிங்கனு கேக்றத்துக்கு பதிலா, எத்தனை கிலோ #தக்காளி தருவிங்கனு தான் கேக்கணும் போல என்கிறார் இந்த நெட்டிசன்.

தக்காளி இல்லாம ரசம்

#தக்காளி இல்லாம இரசம் வைப்பது எப்படி????
ஒரே குழப்பமா இருக்கே என்கிறார் இந்த வலைஞர்.

பணக்காரர்களின் ஆப்பிள்

பணக்காரர்களின் ஆப்பிள் #தக்காளி

சதம் அடித்தது

சதம் அடித்தது #தக்காளி
புதிய இந்தியால இன்னும் எவன் எல்லாம் சதம் அடிக்கபோறானு தெரியலயே !

தக்காளியவா எறியிரீங்க...

#தக்காளி'யவா எடுத்து அடிக்கிறீங்க. இப்ப எறி,எறி.., எறிடா பாப்போம்.!!

"தக்காளி கிலோ 100 ஓவாடா கொய்யால"

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As the tomato price goes higher, netisans comment their opinion in twitter.
Please Wait while comments are loading...