For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெபம் பண்ணுங்க சார்... கொசு கடிக்காது... அசரடிக்கும் பேனர்!

டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையை குறித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பரவலாக பரப்பி வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும், ஆங்காங்கே எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் கலாய்த்து கொசுவைவிட வேகமாக கருத்துகளை நெட்டிசன்கள் பரப்புகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் சமீபகாலமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலோடு வேறு சில மர்ம காய்ச்சலும் பரவி வருகிறது. இதனை ஒடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறது.

எனினும் மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. டெங்கு குறித்து நெட்டிசன்கள் கூறியுள்ள கருத்துகளை பார்ப்போம்.

கொசு கடிக்காது...

சூலூர்- சினாட் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய சிறப்பு ஜெபம் நடைபெறுவதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.

டெங்குகொசு கடிச்சா சங்கு....

செல்போன் அடிச்சா ரிங்கு, டெங்கு கொசு கடிச்சா சங்கு என்கிறார் இந்த நெட்டிசன்.

திருடனுக்கு பயந்த காலம் போயி

முன்பெல்லாம் இரவானதும் திருடனுக்கு பயந்து கதவ சாத்திட்டு, லைட்ட ஆஃப் பண்ணிட்டு, படுப்பாங்க! இப்பல்லாம் கொசுவுக்கு பயந்து செய்றாங்க.

அசைவம் நோ

புரட்டாசி மாதத்தில் அசைவம் கூடாது என்பது கொசுவிற்கு தெரியாது போலும்!

நிலவேம்புதான் காரணம்

அன்பார்ந்த #டெங்கு கொசுக்கள் இன்னும் என்னை கடிக்காம இருக்குறதுக்கு மனமார்ந்த நன்றி.
இது எல்லாத்துக்கும் நிலவேம்பு_குடிநீர்தான் காரணம்

இத்தனை நாள்...

இத்தனை நாள் 'ஆள்அவுட்' வாங்காம இருந்தவங்க எல்லாம் இப்போது ஆள் 'அவுட்' ஆகாம இருந்தா போதும்னு அத வாங்கி மாட்ட ஆரம்பித்துவிட்டார்கள்..

கவனம் தேவை...

வேடிக்கை கொசுவைப் போல் வீழ்வேன் என நினைத்தாயோ என்று #டெங்கு மூலம் மனிதனை வீழ்த்துகிறது போலும். இந்த #ஏடிஸ் வகை கொசு.
கவனம் தேவை

English summary
Netisans registered their comments on Dengue fever and TN government's awareness and protection programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X