
விடுப்பா.. விடுப்பா.. ஆயுத பூஜைன்னா பொரிக்கும்.. தீபாவளினா போனஸுக்கும் போராடுறது சகஜம் தானப்பா..!
சென்னை: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து போனஸ் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தீபாவளி வந்து விட்டாலே புத்தாடை எடுக்க வேண்டும், பட்டாசு வாங்க வேண்டும், பலகாரங்கள் செய்ய வேண்டும் என ஆயிரத்தெட்டு செலவுகளும் வந்து மாதச் சம்பளக்காரர்களுக்கு கவலையைத் தந்து விடும். அப்போது அவர்களுக்கு சந்தோசத்தைத் தருவது நிறுவனங்கள் தரும் தீபாவளி போனஸ் தான்.
போனஸ் பணம் கைக்கு வந்து விட்டாலே அந்த வீட்டிற்கு ஏறக்குறைய தீபாவளி வந்து விட்டதாகத்தான் அர்த்தம். தீபாவளி போனசை நம்பித்தான் இங்கு பல வீடுகளில் தீபாவளியே காத்திருக்கிறது.
இந்நிலையில் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு தமிழக அரசு போனசை அறிவித்துள்ளது. இது தனியார் ஊழியர்கள் மத்தியில் மேலும் போனஸ் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. எப்போது தங்களது நிறுவனம் போனஸ் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்திருக்கின்றனர் என்பது சமூகவலைதளங்களில் வைரலாகும் தீபாவளி போனஸ் மீம்ஸ்களைப் பார்க்கும் போதே நன்றாகத் தெரிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









