என்ன இது அநியாயமா இருக்கு.. பிரியாணி 100 ரூபா.. தக்காளி சாதம் 200 ரூபாயா?
தக்காளி விலை உயர்வு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தக்காளி விலை சற்று குறைந்துள்ள போதும், அதைப் பற்றிய மீம்ஸ்கள் இன்னமும் குறையவில்லை.

வழக்கமாக வெங்காயம் தான் அதிரடியாக விலை உயர்ந்து நடுத்தரவர்க்க மக்களை அழ வைக்கும். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக தக்காளி அந்த வேலையைப் பார்த்து வருகிறது. தக்காளி இல்லாமல் பெரும்பாலான பதார்த்தங்களை சமைக்க முடியாத உணவுப் பழக்கவழக்கத்தைக் கொண்ட நமக்கு, இந்த திடீர் விலையுயர்வு ரொம்பத்தான் திணற வைத்து விட்டது.

தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்ற தேடல் ஒருபுறம் இருக்க, மீம்ஸ் கலாய்ப்புகளும் வழக்கம் போல் மறுபுறம் வைரலாகி இருக்கிறது. கடந்த சில நாட்களைவிட இன்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. ஆனாலும் இன்னமும் மலிவாகவில்லை. எனவே இதை வைத்தும் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications