For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துன்பம் வரும் வேளையிலேயே சிரிங்க!

Google Oneindia Tamil News

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க.. என்று சொல்லி வைத்தார் வள்ளுவரு சரிங்க.. இப்படி ஒரு பாட்டு இருக்கிறது தெரியுமா.. உண்மைதாங்க.. துன்பம் வரும் வேளையில் சிரித்தே அதை கடக்க வேண்டும். .அப்போதுதான் நாம் அந்த இக்கட்டிலிருந்து மீள முடியும்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா என்று பாரதிதாசனும் கூட பாடி வைத்திருக்கிறார். துன்பம் வந்து விட்டால் துவண்டு போய் விடக் கூடாது என்பதே பெரியோர் வாக்கு. இதை பலரும் மறந்து விடுகிறார்கள்.. அப்படி இருக்கக் கூடாது..

laugh when sadness engulfs you

யாருக்குத்தான் வாழ்வில் துன்பம் இல்லை. அதற்காக கவலைப்பட்டால் நம் வாழ்வில் உற்சாகமாக இருக்க முடியுமா. அதை எண்ணி கவலைப்படாமல் இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு நாம் வந்து விட வேண்டும். வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதைக் கண்டு சிரிங்க.

நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் உண்மை அது தான். துன்பத்தைக் கண்டு நீங்கள் அஞ்சாமல் சிரித்தால் அது உங்களை விட்டு வெகுசீக்கிரம் ஓடி விடும். துன்பத்தைக் கண்டு மிரளாமல் இன்பத்திற்கான அடுத்த முயற்சி என்ன என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

எல்லோருக்கும் ஏதாவது ஒரு துன்பம் நிச்சயம் இருக்கும் ஆனால் அதையெல்லாம் மறந்து வாழ்க்கையின் அடுத்த அடியைத் திறம்பட எடுத்து வைப்பவனே சிறந்த மனிதன் ஆகிறான். துன்பம் என்பது நிரந்தரமல்ல. நமக்குத் துன்பம் வரும்போது நம்மை விட அதிக துன்பப்படுபவரின் நிலையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் நம் மனதைரியத்தையும் முயற்சியையும் கைவிடாமல் இருக்க முடியும்.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள்பவனே வாழ்வில் வெற்றி அடைகிறான். துன்பத்தைக் கண்டு பயப்படாதீங்க அதை எதிர்த்துத் துணிந்துப் போராடுங்கள். இதுவும் கடந்து போகும் என்று நினைத்தால் எல்லா நாளும் இனிய நாளே.

உங்களின் உண்மையான சொத்து எது தெரியுமா?உங்களின் உண்மையான சொத்து எது தெரியுமா?

English summary
You have to laugh when sadness engulfs you.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X