அன்பும்.. துவேஷமும்.. பின்னணிப் பிணைந்த இரு முரண்கள்!
தூண்டி விடப்படுவதிலிருந்து துவேஷம் பிறக்கிறது.. பாராட்டுதலிலிருந்து அன்பு சுரக்கிறது.. இரண்டும் இரு வேறு முரண்கள் என்றாலும்.. இவை பிறப்பது மயிரிழை வித்தியாசத்தில்தான் இருக்கிறது என்பது எத்தனை ஆச்சரியமானது.
அன்பால் செய்யும் செயல் முழுமை பெறுகிறது. அடுத்தவர் மீது துவேஷம் வளர்ப்பதால் எந்த பயனும் இல்லை மாறாக நம்மிடம் இருக்கும் நல்ல குணங்கள் எல்லாம் துவேஷம் காட்டுவதால் நம்மை அறியாமலேயே மறைந்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஜீவராசியும் இவ்வுலகில் எதிர்பார்ப்பது அன்பு ஒன்று தான். மற்றவரிடம் துவேஷம் வளர்ப்பதால் பகை வளருமே தவிர வேறெதுவும் நடக்காது.

உயிர்களிடத்திலே அன்பு செலுத்துங்கள். அன்பினால் எல்லாவற்றையும் வசப்படுத்த முடியும் ஆனால் துவேஷம் பாராட்டுவதால் எதையும் நாம் அடைய முடியாது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறான் என்பார்கள். உளப்பூர்வமாக ஒரு செயலைச் செய்யுங்கள் மனதில் பகை வளர்த்து ஒருவருக்கு நன்மை செய்வது போல் நடிக்கக் கூடாது. நாம் செய்யும் தீய செயல்களுக்கான பயனை நாம் கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அன்பு சூழ் உலகு இது. அன்பு கொண்டவரால் எந்த செயலையும் எளிதாக சாதிக்க முடியும் ஆனால் மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்பட்டு துவேஷம் வளர்ப்பது நம் வளர்ச்சியை நாமே தடுப்பது போலாகி விடும். போட்டி அவசியம் தான் ஆனால் பொறாமை வேண்டாமே. ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். அன்போடு நாம் பிறர் ஜெயித்தாலும் அவரை மனதாரப் பாராட்ட வேண்டும். உயிர்கள் விரும்புவது அன்பு ஒன்றே. துவேஷம் பாராட்டுவதால் எந்த நன்மையும் இல்லை. அதனால் துவேஷம் வேண்டாம் எப்பொழுதும் அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications