தாய்மை எனும் காதல்!
தாய்மையைப் போன்ற ஒரு அருமையான காதல் உலகில் எங்குமே காண முடியாது.. தட்ட வேண்டிய நேரத்தில் தட்டியும், தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்தும், தழுவ வேண்டிய நேரத்தில் தழுவுவதும் தாய்மைக்கு மட்டுமே உரிய அம்சங்களாகும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்வைப் பூர்த்தியடையச் செய்வது தாய்மை தான். பிள்ளை உண்டான நாள் முதல் அதன் வளர்ச்சியை அணு அணுவாக அனுபவித்து பிள்ளை பெறும் வலியைக் கூட பொருட்படுத்தாது குழந்தை பத்திரமாக வெளியே வந்தால் போதும் என்று நினைப்பாள். பத்து குழந்தை இருந்தாலும் தாயின் அன்பில் வேறுபாடு கிடையாது. குழந்தையை உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்வாள்.

நாம் தோல்வி அடையும் போது நமக்கு தன்னம்பிக்கை கொடுத்து பிள்ளைக்காகப் பார்த்து பார்த்து சமைத்து அவன் எத்தனை மணிக்கு வந்தாலும் அவனுக்கு உணவளித்த பின்னர் தான் தாய் உணவு அருந்துவாள். பிள்ளைக்கு ஒரு கஷ்டம் என்றால் துடிதுடித்துப் போய் விடுவாள். எப்போதும் பிள்ளைகளுக்குப் பக்கபலமாக நிற்பாள்.
தன் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து அகமகிழ்ந்து விடுவாள் தாய். தன் பிள்ளையின் முகம் பார்த்தே அவன் மனநிலையைத் தெரிந்து கொள்வாள். அம்மாவின் சேலைக்குள் மறைந்து கொள்ளாத பிள்ளைகளே கிடையாது. தாயின் அரவணைப்பில் தன்னிலை மறப்போம். தான் கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை சிரமப்படக் கூடாது என்று நினைக்கும் தாயுள்ளம்.
தாயிற் சிறந்த கோவில் இல்லை என்பார்கள். ஒரு பெண் தன் கணவன் மீது வைத்திருக்கும் அன்பை விட தன் பிள்ளைகள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பாள். குழந்தைகள் தான் அவள் உலகம் வாழ்க்கை எல்லாமே. பிள்ளைகளின் வெற்றியைக் கொண்டாடுவாள். நம் வளர்ச்சிக்கு வித்திடுபவளும் தாய்.
தாய்மை என்பது வரம் என்று சும்மாவா சொன்னார்கள். ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடையும் போது ஏற்படும் சந்தோசத்திற்கு ஈடு இணையே கிடையாது. தாய்மை அழகானது. அன்பு அரவணைப்பு அக்கறை மிகுந்தது. தாய்மையைப் போற்றுவோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications