
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் வாழ்த்து
நியுயார்க்:
ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் கோஃபி அன்னான், ரஷியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
புடினுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
ஐக்கிய நாடுகள் சபை மூலமாக அவருக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன். தங்களுக்கு ரஷ்யாவில் மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
மிகச்சிறந்த அரசியல்வாதியான தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும். தாங்கள் ஒரு கடின உழைப்பாளி. இந்த வெற்றி உங்களது திறமைக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி. ஐ.நா.சபையின் ஒத்துழைப்பு முழுவதும் உங்களுக்குக் கிடைக்க நான் துணைபுரிவேன்.
மக்கள் இந்தத் தேர்தலில் சரியான தீர்ப்பைத்தான் வழங்கியிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் விளாடிமிர் புடினிற்கு அதிக செல்வாக்கு உள்ளது என்று தனது வாழ்த்துச் செய்தியில் அன்னான் குறிப்பிட்டுள்ளார்.