வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லாரி இலங்கை அகதிகளுடன் ராமேஸ்வரம் வந்த விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த பெண் அஞ்சலிகா உள்பட இருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தை மீட்க ராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் உள்ள தமிழர்கள்உயிருக்கு பயந்து அகதிகளாக தமிழகம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அகதிகள் அனைவரும் நள்ளிரவில் படகுகள் மூலம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் வந்திறங்குகின்றனர். அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில்அதிகாரிகள் தங்க வைக்கின்றனர்.
அப்படி அகதிகளாக வந்தவர்களில் விடுதலைப்புலிகள் யாராவது இருக்கிறார்களா என்ற சோதனை அடிக்கடி நடைபெற்று வருகிறது. புதன் அன்று மண்டபம்அகதிகள் முகாமில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சேஷசாயி, அகதிகள் மறுவாழ்வு ஆணையர் மெய்கண்ட தேவன், விசாரணைப் பிரிவு தனி கலெக்டர்சங்கிலி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவியுடன் அகதிகள் வீடுகளில் புலிகள் தங்கியிருக்கிறார்களா என்பதை வீடு வீடாக சென்று அதிகாரிகள் குழுவினர்சோதனையிட்டனர். விடிய விடிய இச்சோதனை நடைபெற்றது. பின்னர் போலீசாரின் பாதுகாப்பில் இருந்த 12 அகதிகளை அவர்கள் சோதனையிட்டனர்.இவர்கள் அனைவரும் மணல் திட்டு என்ற இடத்தில் நடுக்கடலில் இறக்கி விடப்பட்டவர்கள். அவர்களை இந்திய கடற்படையினர் அழைத்து வந்து தனுஷ்கோடிபோலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த 12 பேர்களில் அஞ்சலிகா என்ற பெண் புலியும், சிற்றம்பலம் என்ற விடுதலை புலியும் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications