For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

கே: கிருஷ்னா நதி நீர் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் வந்து விடும் என்று முதல்வர்கருணாநிதி கூறியிருக்கிறரே?

ப: எந்த ஏப்ரல்?.

கே: வால்ஷ் சாதனை குறித்து....?.

ப: வால்ஷ் ஒரு ஜென்டில்மென் ஆட்டக்காரர். அவர் சாதனை புரிந்துள்ளதுமகிழ்ச்சிக்குரியது. நமது மகிழ்ச்சி இருக்கட்டும். இம்ரான்கானுக்கு ரொம்பவும்திருப்தியாக இருக்கும். முன்பு கபில்தேவ் அதிக விக்கெட் சாதனையைப் புரிந்த போது,இம்ரான்கான் ரொம்பவும் அப்செட் ஆகி விட்டார். முந்தைய சாதனையாளர் ஹாட்லி,தனது ஓய்விலிருந்து வெளியே வந்து, மீண்டும் விளையாடி, கபில்தேவின் சாதனையைமுறியடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் பாவம், இப்போது நிம்மதியாகத்தூங்குவார்.

கே: பெண்கள்தான் ஒரு நாட்டை சிறந்த நாடாக மாற்ற முடியும் என்று அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகம் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?.

ப: பெண்கள் மனது வைத்து, ஒதுங்கி நின்றால் தான். ஒரு நாடு சிறப்படையும் என்றுசொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. அதை எப்படி ஏற்றுக் கொள்வது? அநியாயமாகஇருக்கிறதே! பெண்கள் மீது அவருக்கு என்ன அவ்வளவு அவநம்பிக்கை!

ப: பெண்கள் மனது வைத்து, ஒதுங்கி நின்றால் தான். ஒரு நாடு சிறப்படையும் என்றுசொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. அதை எப்படி ஏற்றுக் கொள்வது? அநியாயமாகஇருக்கிறதே! பெண்கள் மீது அவருக்கு என்ன அவ்வளவு அவநம்பிக்கை!

கே: முன்னாள் பிரதமர்கள் சேர்ந்து மூன்றாவது அணி பற்றிப் பேசி வருவது, ஏதாவதுபலனை அளிக்குமா?

ப: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையில் வி.பி. சிங்இறங்குவார்; அதற்கு உதவத்தான் நாங்கள் இருக்கிறோம் - என்பது மற்ற மூவருக்கும்புரியும் போது, வி.பி.சிங்கின் இந்த முயற்சி தடைப்படும். அது வரை தமாஷ் நடக்கும்.

கே: அரசியல்வாதிகளை எந்த விஷயத்தில் நம்பலாம்?

ப: அரக்கர்களைப் போல தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள்- என்றுநம்பலாம். சிலர் சீக்கிரமே நம்பிக்கையைப் பூர்த்தி செய்வார்கள்;சிலர் விஷயத்தில்கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஆனால் நம்பிக்கை வீண் போகாது.

கே: பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று பெண்களை விட ஆண்கள் அதிககூப்பாடு போடுவது ஏன்?.

ப: பாலிடிக்ஸ் , வேலை, பொது வாழ்வு, அது, இது என்று பெண்கள் வெளியேபோய்க்கொண்டிருந்தால், வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று திட்டமிடுகிறஆண்கள் இவர்கள்! இவர்களை நம்புவது பெண்களுக்கு நல்லதல்ல.

கே: நீங்கள் கட்சி ஆரம்பித்தால் ஓரு ஓட்டுக்கு எவ்வளவு தருவீர்கள்?

ப: நிறையவே தரலாம்; தாராளமாகத் தரலாம். எத்தனை ஓட்டு வந்துவிடப்போகிறது!ஒன்றோ, இரண்டோ ! கூட கொடுப்பதால் பெரிய செலவு இருக்காது.

கே: தமிழக முதல்வர் கருணாநிதியின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பற்றி...?

ப: வாழ்ந்து காட்டுவோம் என்பதில் புதிதாக என்ன இருக்கிறது? தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிற திட்டம் தானே இது!

கே: அரசியலை சாக்கடையுடன் ஒப்பிடுகிறார்களே ஏன்? அப்படி இரண்டுக்கும் என்னஒற்றுமை இருக்கிறது?

ப: தவறாக நினைத்துக் கொள்ளளாதீர்கள். சாக்கடை மீது எரிச்சல் வரும்போது, சிலர்இப்படி சொல்லி விடுகிறார்கள். அதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது.சாக்கடையை அவமானப்படுத்த வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல.கோபத்தில் பேசி விடுகிற வார்த்தை- அவ்வளவு தான்.

கே: புதுவை அரசில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லையே, ஏன்?

ப: த.மா.கா.வின் தர்ம சங்கடத்தைத் தற்காலிகமாகத் தவிர்ப்பதற்காகத்தான்

கே: வாழ்க்கையில் விரக்தி அடைந்தவற்கும், அரசியலில் விரக்தியடைந்தவற்கும்என்ன வேறுபாடு?

ப: வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் - தற்கொலை செய்து கொள்வார்; அரசியலில்விரக்தி அடைந்தவர் - கவர்னராவார், பெரிய வித்தியாசமில்லை.

கே: காங்கிரஸ் கட்சிக்குள் ஊடுறுவிவிட்ட தி.மு.க.வினர் தான், என்னை மாற்றவேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர் என்று திண்டிவனம் ராமமூர்த்தி கூறுகிறாரே?

ப: அடக் கடவுளே! காங்கிரஸார் சிலராவது கொஞ்சம் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் - அவர்கள் காங்கிரஸ்காரர்களே இல்லையா? அதுதானே பார்த்தேன்!என்னடா இது, காங்கிரஸில் இவ்வளவு சுறு சுறுப்பா - என்று ! இது கழக கேஸா! சரி சரி!

கே: த.மா.கா. வும், காங்கிரஸூம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இணைந்துசெயல்படும் என்று திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளது பற்றி...?

ப: தோட்டா இல்லாத துப்பாக்கிக்கு எத்தனை குழல் இருந்தால் என்ன பிரயோஜனம்?குழல் அதிகமாக, அதிகமாக வெறும் ஓட்டைதன் மிஞ்சும்.

கே: பீஹாரில், பெயர் குழப்பத்தால் ஒரு எம்.எல்.ஏ. மந்திரியாகி விட்டாராமே?

ப: அது ஆள் மாறாட்ட கேஸ். கேரளாவில் ஒரு மந்திரி மீது கற்பழிப்பு குற்றச்சாட்டுவந்தாகி விட்டது. ஃபோர்ஜரி செய்ததாக ஏற்கனவே ஒரு மந்திரி மீது குற்றச்சாட்டுஉண்டு. திருட்டுக் குற்றம் மந்திரிகள் சர்வ சாதரணமாகச் செய்வது. ஆக, பஞ்சமகாபாதகங்கள் எதையும் இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது

கே: எங்களுக்குப் புல்லும் ஆயுதம் என்று த.மா.கா. எம்.எல் ஏ., ஒருவர்கூறியிருக்கிறாரே?

ப: இன்றைய அரசியல்வாதிகளுக்கு கக்ஃஃ இருந்தால் மட்டும் போதாது; கக்குஏஇருக்க வேண்டும்.

கே: பா.ஜ.க.வை முறியடிக்க மீண்டும் மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று ஜோதி பாஸூ கூறியிருப்பது குறித்து...?

ப: பா.ஜ.கா. வுக்கு இதை விட நல்லது நடக்க முடியாது. காங்கிரஸ் ஒரு புறமும்,மூன்றாவது அணியின் புதிய அவதாரம் ஒரு புறமும், ஓட்டைப் பிரித்துக் கொண்டால்,பா.ஜ.க.வுக்கு லாபம் தான்.

கே: முகம்மது பின் துக்ளக்கில் எல்லா எம்.பி.க்களையும் நீங்கள் உதவிபிரதமராக்கியதற்கும் காங்கிரஸ் எம்,எல்.ஏ.க்கள் அனைவரையும் ராப்ரி தேவி,அமைச்சர்களாக்கியதற்கும் என்ன வேறுபாடு?

ப: நான் நடத்தியது நாடகம் ; ராப்ரி தேவி நடத்துவது தெருக்கூத்து.

கே: பாகிஸ்தான் அணி என்றால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அவ்வளவு பயமா?

ப: பாகிஸ்தான் என்ன? வர, வர கிரிக்கெட் என்றாலே, இந்திய அணியினருக்குஉதறலாகத்தான் இருக்கிறது. டெலிவிஷன் விளம்பரம் என்றால், மகிழ்ச்சியோடுஆடுகிறார்கள், குதிக்கிறார்கள். கிரிக்கெட் என்றால் விழிக்கிறார்கள்.

கே: பீஹாரில் காங்கிரஸ் எம்எல்.ஏ.க்கள் அனைவரும் மந்திரியாகி உள்ளனரே?

ப: இதில் ராப்ரி தேவிக்கு பெரிய பெருமை எதுவும் இல்லை. வழி காட்டி கல்யாண்சிங். அவர் தான் இந்தச் சாதனைக்கு உரிமை கொண்டாட முடியும்.

கே: அமெரிக்க அதிபர் க்ளிண்டனின் இந்திய பயணத்தின் போது அரசும்,பத்திரிக்கைகளும் பொறுமை, கண்ணியம், பெருமிதத்தை காற்றில் பறக்க விட்டு,முதிர்ச்சியற்ற வகையில் நடந்து கொண்டன என்று முன்னாள் பிரதமர் சந்திர சேகர்குற்றம் சாட்டியுள்ளாரே?

ப: பத்திரிக்கை விஷயத்தில் சந்திரசேகர் கூறியுள்ளது நியாயமான விமர்சனம். அரசுவிஷயத்தில் அவருடைய விமர்சனம் நியாயமல்ல. அரசு கெளரவமாகவே நடந்துகொண்டது. அசடு வழிந்தது பத்திரிக்கைகளும், டெலிவிஷனும் தான்.

கே: சமையல் கியாஸ் , கெரசின் விலை உயர்வு திரும்பப் பெற மாட்டாது என்றுபுதுவை அமைச்சர் ராம் நாயக் உறுதியாகக் கூறிவிட்டாரே?

ப: பாராளுமன்றம் கூடிய பிறகும், இந்த உறுதி நீடித்தால் அது உண்மையிலேயேபெரிய விஷயம் தான்.

கே: தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க. வை விட ஊழல் அதிகரித்துள்ளது என்று புதுவைமுதல்வர் ஷண்முகம் கூறியுள்ளாரே?

ப: இதெல்லாம் சும்மா வாய்ப் பேச்சு. ஆட்சி மாறினால் தான் அதிகாரபூர்வமாகத்தெரிய வரும்.

கே: அ.தி.மு.க.வினர் இப்போது கைகளில் பச்சை குத்துவதை ஏன் நிறுத்திவிட்டார்கள்...?

ப: நெற்றியில் நீதி மன்றம் பச்சை குத்த ஆரம்பித்திருக்கிறதே கையில் வேறு பச்சைஎதற்கு?.

கே; வாழ்நாள் முழுவதும் அ.தி.மு.க. எங்கள் எதிரி என்று சாசனம் எழுதிக்கொடுத்தோமா எனக் கேட்கிறாரே புதுவை அமைச்சர் கண்ணன்? இது பற்றி?.

ப: பின் என்ன? ஊழலை சாகும் வரையிலா எதிர்க்க முடியும்?

கே: காங்கிரஸ் கட்சிக்குள் ரெளடிகள் வந்து விட்டனர் என்கிறாரே திண்டிவனம்ராமமூர்த்தி ? இது பற்றி?

ப: சில கட்சிகள், அவர்களிடமே போய் விட்டனவே! அதற்கு, காங்கிரஸ் எவ்வளவோதேவலையே!

கே: அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு கலைத்து விட்டு, புதியநிர்வாகிகளை நியமித்துள்ளார் ஜெயலலிதா. இது அவரது பலத்தை காட்டுகிறதா?பலவீனத்தைக் காட்டுகிறதா?

ப: பலவீனத்தைத்தான் காட்டுகிறது. தன்னம்பிக்கை இல்லாதவர்களின் செயலாகத்தான்இது காட்சியளிக்கிறது. ஊழல் வாதிகளை ஒழித்து விட்டேன் என்று மக்களிடம் கூறி,ஊழலுக்கும் தனக்கும் தொடர்பில்லாதது போல் ஒரு தோற்றம் ஏற்படுத்த இது உதவும் -என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது தனக்கு வேண்டிய குடும்பத்தினரைத் திருப்திசெய்ய சில பலிகளைக் கொடுக்க அவர் முனைந்ததன் விளைவாகவும் இதுஇருக்கலாம். ஜெயா டெலிவிஷனுக்கு நிதி அளிக்க மறுத்தவர்கள்பலியாகியிருக்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.இதில் எது காரணமாகஇருந்தாலும் சரி - நடந்திருப்பது, அ.தி.மு.க. ஒரு கட்சி அல்ல; ஒரு கம்பெனிஎன்பதைக் காட்டுகிறது.

கே: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது போல், நிபந்தனைகளுடன் கூடிய போலீஸ்சங்கம் அமைக்க அரசு அனுமதி தர வேண்டும்என்று தமிழக போலீஸ்சங்கம் அமைக்க அரசு அனுமதி தர வேண்டும்என்று தமிழக போலீஸார் கோரிக்கைவைப்பது - ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானா?

ப: எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கித் தள்ள வேண்டிய கோரிக்கை.

கே:முன்னாள் வளர்ப்பு மகன் பற்றி, ஜெயலலிதா விடுத்த கடுமையான எச்சரிக்கைஅறிக்கை பற்றி தங்கள் கருத்து?

ப: இது ஒரு மோதலின் விளைவு; இதனால் அந்த மோதல் வெடித்து வெளியாகிறதா -அல்லது தணிந்து, மறைந்து விடுகிறதா என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.(நமது தலையெழுத்தைப் பார்த்தீர்களா? இது பற்றியெல்லாம் கேள்வி கேட்கும்அளவுக்கு நீங்களும், பதில் சொல்லும் அளவுக்கு நானும் இறங்கியாகவேண்டியிருக்கிறது! தமிழக அரசியல் பற்றி எழுதுவது என்றால், இனி கெளரவத்துடன்தப்பிக்க முடியாது போலிருக்கிறது. இந்த நிலை வந்தது, அ.இ.அ.தி.மு.க.வின் அற்புதசாதனை!)

கே: அமெரிக்கா தலையீட்டால்தான் கார்கில் போர் முடிவுக்கு வந்ததாக அதிபர் பில்க்ளிண்டன் கூறியிரூப்பது சரியா?

ப: அமெரிக்க தலையீடு ஓரளவு உதவியது உண்மைதான். ஆனால்,ஊடுருவல்காரர்களை விரட்டியடித்த நமது ராணுவத்தின் செயல்பாடுகுறிப்பிடத்தக்கது. முழுப் பெருமையையும் தானே ஸ்வீகரித்துக் கொள்ள க்ளிண்டன்முயற்சித்திரிக்கிறார். நமது தரப்பில் யாராவது நமது ராணுவத்தின் செயல்பாட்டைஎடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.

கே: மதவாதக் கட்சி என்ற சாயத்திலிருந்து மீள, பாரதீய ஜனதா கட்சி என்ன செய்யவேண்டும்?

ப: ஊழல் கட்சி என்று பெயர் எடுக்க வேண்டும். அப்போது மதவாதம் என்றகுற்றச்சாட்டை மற்ற கட்சிகள் மறந்து விடும்.

கே: நன்றாகவும், நட்பாகவும்தானே இருந்தார்கள்! பின் ஏன் இப்படி அடித்துக்கொள்கிறார்கள் வாழப்பாடியும், ராமதாஸூம்...?

ப: நட்பு ஓவராகப் போகும்போது - அது நாடகமாகி விடுகிறது. அதன் விளைவுதான்இந்த மாதிரி மோதல்கள். இது, வேறு ஒரு நட்புக்கும் பொருந்தும்; அந்த நட்பு என்னஆகிறது என்று பார்க்க வேண்டும்.

கே: உழவர் சந்தையில் காய்கறி வாங்கி சமத்துவ புரத்தில் நமக்கு நாமே சமைத்துச்சாப்பிட்டு, வயிற்று போக்கு வராமல், வருமுன் காப்போம் -என்ன?

ப: இப்படியெல்லாம் நீங்கள் நம்பினால்தான், ஆட்சியாளர்களால் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

கே: தொலைக்காட்சி கண்ணோட்டத்தில் பார்த்தால் முதல்வர் கூறியது சரி; தேசியக்கண்ணோட்டத்தில் பார்த்தால் பிரதமர் ஹிந்தியில் பேசியது சரி - என பா.ஜ.க.வின்இல. கணேசன் கூறியிருக்கிறாரே?

ப: தேசிய ஜனநாயக கூட்டணி என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், கணேசன்கூறியிருப்பது சரி.

கே: இந்தியா ஏழை நாடல்ல என்று க்ளிண்டன் கருத்து தெரிவித்திருப்பது பற்றி?

ப: அவருக்கு இந்த எண்ணம் வந்ததில் என்ன வியப்பு? அமெரிக்காவை விட, இந்தியாஅதிகமாகச் செல்வம் கொழிக்கிற நாடு என்று அவர் நினைக்காததுதான் ஆச்சர்யம்.அவர் சந்தித்தவர்களில், அதிகம் பேர் அரசியல்வாதிகள் தானே!

கே: பிஹாரில் மெகாமந்திரி சபை (83 அமைச்சர்கள்) குறித்து...?

ப: கேள்வியைத் திருத்திக் கேளுங்கள். அது மந்திரி சபை அல்ல. மந்திரி கும்பல்.

கே: கிண்டல், ஜோக் இரண்டுமே குரூர மனப்பான்மையின் வெளிப்பாடுதானே...?

ப: கரெகட், அடி, உதை இரண்டும்தான் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு.

கே: கல்வி, செல்வம், வீரம் - ஆகிய மூன்றுக்கும் நாம் வணங்குவது பெண்தெய்வங்களைத்தானே...?

ப: ஆமாம். அதில் என்ன சந்தேகம்? மூன்றும் நம்மிடம் இருக்கும் லட்சணத்தைபார்த்தாலே தெரியவில்லையா?

கே: நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் லேட்டாக நடந்து விட்டாலும், நீங்கள்சொல்வதைப்போலவே நடந்து விடுகிறதே அது எப்படி?

ப: பூகம்பம், மழை. புயல் போன்றவை வருவதை முன் கூட்டியே உணர்ந்து விடுகிறசக்தி சில மிருகங்களுக்கு உண்டு.

கே: அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யாராக இருந்தாலும், அவர் க்ளிண்டனின் சமீபத்தியஇந்திய ஆதரவு,மற்றும் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சி எதிர்ப்பு கொள்கையைத்தொடர்ந்து கடைப்பிடிப்பார் என்று நம்பலாமா?

ப: நம்பலாம் என்று நினைக்கிறேன். ஜனநாயகக் கட்சியின் கோர் வென்றால்,க்ளிண்டனின் அணுகுமுறை தொடர்வதில் பிரச்னை இருக்காது. ரிபப்ளிக்கன் கட்சியின்புஷ் வென்றாலும் சிக்கல் எழ வாய்ப்பிருக்காது என்று நினைக்கிறேன். இன்றையரிபப்ளிக்கன் வேட்பாளர் புஷ்ஷின் தந்தை, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது,இந்தியாவின் நண்பராகத்தான் இருந்தார். தவிர ரிபப்ளிக்கன் கட்சி வென்றால், முக்கியபதவிக்கு வரக் கூடிய ஒருவர் - இந்தியாவுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்வதுமிகவும் முக்கியம் என்று பேசியிருக்கிறார். ஆக, இப்போதைய நல்லுறவு முயற்சிகள்தொடரும் என்று நம்புவதற்கு நிறையவே இடமிருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X