தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்பாணத்தை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்துள்ளதால் அங்கு சிக்கியுள்ள தனது 40,000 ராணுவ வீரர்களைக்காப்பாற்ற இந்தியாவின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது.
இந்த கோரிக்கை குறித்து விவாதிக்க பாதுகாப்பு குறித்த கேபினட் கமிட்டி டெல்லியில் கூடுகிறது.
ஏப்ரல் 22-ம் தேதி யானை இறவு முகாமை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். சிலநாட்களில் பலாய் ராணுவ முகாமை பிடித்தனர். தற்போது யாழ்ப்பாணம் நகரம் நோக்கிவிடுதலைப் புலிகள் முன்னேறி வருகின்றனர். கிலாலி பகுதியிலுள்ள முக்கியசாலையை விடுதலைப் புலிகள் தங்கள் வசம் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்றுதமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
இலங்கை பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா அவசரமாக கூட்டினார். இலங்கையின் வட பகுதியில் விடுதலைப்புலிகளுடனான போர் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
முப்படைத் தளபதிகள், துணை பாதுகாப்பு அமைச்சர் அனிருத்தா ரத்வத்தே ஆகியோர்இகூட்டத்தில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்விடுதலைப் புலிகள், யாழ் நகரைத் தாக்கினால், அதை எப்படி எதிர்கொள்வது என்பதுகுறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் புதியஉத்திகள் வகுக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
தற்போது யாழ்ப்பாணம் நகரில் 40,000 இலங்கை ராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். யாழ் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகள் கை ஓங்கி வருகின்றநிலையில் இவர்களது நிலை கேள்விக்குரியதாகி விட்டது.