தமிழகத்தில் இன்று
சென்னை:
குற்றங்கள் நடப்பதைப் போலீசாரிடம் நேரிடையாக சொல்லத் தயங்கும் பொது மக்களின் வசதிக்காக அது குறித்துரகசிய முறையில் தெரிவிக்க ஆறு இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட புகார்பெட்டியை போலீஸ் கமிஷனர் காளிமுத்து திறந்து வைத்தார்.
இந்தப் புகார் பெட்டிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை திறந்து பார்க்கப்பட்டு புகார்கள் மீது விசாரணைநடத்தப்படும். சென்னை நகரில் காவல்துறை விழிப்பு மற்றும் நலப்பிரிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்செயல்பட்டு வருகிறுது.
இந்தப்பிரிவு வட சென்னை குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் செயல்பட்டுவருகிறது.
இந்த நலப்பிரிவு சார்பில் சென்னை நகரில் ஆறு காவல் நிலையங்களில் காவலர்கள் காலை 7 மணி முதல் இரவு 8மணி வரை பணியாற்றி வருகின்றனர்.
இந்த பெட்டியில் சேரும் மனுக்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு கமிஷனர் காளிமுத்து கூறினார்.
யு.என்.ஐ.