For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
முல்லைப் பெரியாறு பிரச்சனை: முதல்வர் டெல்லி பயணம்

சென்னை:

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து டெல்லியில் வருகிற 22-ந் தேதி பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில்முதல்-அமைச்சர் கருணாநிதியும், கேரள முதல்-மந்திரி ஈ.கே.நாயனாரும் கலந்து கொள்கிறார்கள்.

இதையொட்டி முதல்-அமைச்சர் கருணாநிதி 19-ந் தேதி டெல்லி போகிறார். முதல்அமைச்சர் கருணாநிதி சென்னைகோட்டையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது முதல்வரிடம் முல்லைப் பெரியாறு அணை பற்றி மத்திய அரசிடம் கலந்து பேச்சு வார்த்தைநடத்துவீர்களா ? என்று கேட்ட போது,

நான் இந்த மாதம் 19-ந் தேதி டெல்லி செல்கிறேன். டெல்லியில் திட்டக்குழு கூட்டம், காவிரி ஆணையத்தின்கூட்டம், இண்டர்-ஸ்டேட் கவுன்சில் கூட்டம் , முல்லைப் பெரியாறு பேச்சுவார்த்தைக்கான் ஏற்பாட்டையும் மத்தியஅரசு ஏற்பாடு செய்துள்ளது. அப்போது நானும் கேரளமுதல்வரும் முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்துப்பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.

19-ந் தேதியிலிருந்து 22-ந் தேதி வரை டெல்லியில் தங்குகிறேன். அந்த நாட்களில் இந்தக் கூட்டங்கள் எல்லாம்நடைபெறுகிறது. அதிலே நான் கலந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X