செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோதல்; நாற்காலி வீச்சு

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில்முடிந்தது. கவுன்சிலர்கள் நாற்காலிகளை வீசி மோதிக் கொண்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை மேயர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினை மற்றும்வங்கிக் கணக்கு தொடர்பான விவாதம் நடந்தது.

விவாதத்தின்போது, திமுக உறுப்பினர் ஒருவரது கேள்விக்கு பதிலளிக்க த.மா.கா உறுப்பினர் ஒருவர் முயன்றார். அப்போது அதுதொடர்பாக இருவருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி மோதலாக மாறியது. இதையடுத்து இருவரும் நாற்காலிகளை தூக்கி எறிந்து மோதிக் கொண்டனர்.இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மோதலையடுத்து கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு மேயர் உமா மகேஸ்வரி வெளியேறினார்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற