செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இலங்கைத் தமிழர்க்கு உதவலாம், ஆனால்....

சென்னை:

இலங்கைத் தமிழர்களுக்கு உதவலாம்; ஆனால், விடுதலைப் புலிகளுக்கு உதவக் கூடாது என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் (த.மா.கா.) கூறினார்.

சட்டசபையில் திங்கள் கிழமை காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில்சோ.பாலகிருஷ்ணன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஈழத் தமிழர் பிரச்னை என்பது வேறு; விடுதப்ைபுலிகள் பிரச்னை என்பது வேறு. இந்த இரண்டையும் ஒன்றாக்கிஇலங்கை விஷயத்தில் முடிவெடுக்கக்கூடாது. இலங்கை தமிழர்களுக்கு நிறைய உதவிகள் செய்யலாம். அதில்தவறில்லை. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செய்யக் கூடாது.

அவர்கள் தீவிரவாதிகள். தமிழர் தலைவர்கள் பலரை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.தமிழ் மண்ணில் ராஜீவ்காந்தியை அவர்கள் கொலை செய்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்படக்கூடாது என்பதேஎங்கள் நிலை.

கோவையில் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்டவர் கோட்டை அமீர் அங்குள்ள மத தீவிரவாதிகளால்கொலை செய்யப்பட்டார். அண்ணா பதக்கம், முதல்வர் பதக்கம் வழங்கப்படுவது போல் மத ஒற்றுமையைவலியுறுத்தி கோட்டை அமீர் பெயரால் அரசு பதக்கம் வழங்க வேண்டும் .

எந்த போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் புகார் கொடுக்கச் சென்றலும், இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர்கள்இருப்பதில்லை. கேட்டால் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டனர் என்கிறார்கள்.

நீதிமன்ற பணிகளை கவனிப்பதற்காக தனி அதிகாரிகளை நியமிக்கலாம்.

போலீசாருக்கென சங்கம் இல்லாததால் அரசே அவர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்கள் குறைகளைகேட்டறிய வேண்டும். போலீசார் மரியாதையோடும், மனிதாபிமானத்தோடும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற