தமிழகத்தில் இன்று
சென்னை:
2000 - 2001ம் நிதியாண்டில் தமிழக அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 865 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை மத்திய அரசு தரவிருக்கும்மாநிலங்களுக்கான பகிர்வுத் தொகை மூலம் சமாளித்து விடலாம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் புதன் கிழமை இவ்வாண்டுக்கான நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இதன் மீது நடைபெற்ற விவாதத்திற்குமுதல்வர் கருணாநதி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
1999-2000 நிதியாண்டுக்கான மத்திய திட்ட ஒதுக்கீடு ரூ. 5,250 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டையும் மீறி ரூ. 5,415 கோடிரூபாய் அளவுக்கு தமிழகத்தில் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட முடியாமல், திருப்பி அனுப்பும் நிலைஇருக்கிறது.
2000-2001 நிதியாண்டுக்கான இறுதி பற்றாக்குறை ரூ. 665 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறினேன். ஆனால், அதன் பின்னர் பட்ஜெட்விவாதத்தின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மூலமாக கூடுதலாக அரசுக்கு ரூ. 200 கோடி ரூபாய்க்கு பற்றாக்குறை ஏற்படும் என்றுகணக்கிடப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் ரூ. 865 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று தெயவந்துள்ளது.
இந்த பற்றாக்குறையை எப்படி சமாளிக்க முடியும் என்பதை நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். மத்திய அரசின் மொத்த வருவாயில் மாநிலங்களுக்கானபங்காக 29 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை மாநிலங்கள் வற்புறுத்தி வந்தன. ஐக்கிய முன்னணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டஇந்த முயற்சிக்கு பாஜக ஆட்சியில் பலன் கிடைக்கப் போகிறது.
இதற்காக அரசியல் சட்டத்தில் 89வது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களின் பகிர்வுத் தொகை 96-97ம் ஆண்டில் இருந்துமுன்தேதியிட்டு 99-2000ம் ஆண்டு வரை தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மேலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதோடு சிக்கன நடவடிக்கைகள் மூலம் பற்றாக்குறையை சமாளிக்க டியும் என்றுஅரசு நம்புகிறது.
அரசுத் துறைகளில் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தலைமைச் செயலாளர், மற்ற துறை செயலாளர்களை அழைத்துபேசியுள்ளார். மத்திய அரசின் பகிர்வுத் தொகை பெறப்பட்டால், பட்ஜெட்பற்றாக்குறை மட்டுமல்ல, தென்மாவட்டங்களில் மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும் என்றார் முதல்வர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!