தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

இலங்கை ராணுவத்துக்கு இஸ்ரேல் தொழில்நுட்ப உதவி அளிக்கும்

கொழும்பு:

விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினருக்கு இஸ்ரேல் தொழில்நுட்ப உதவிகளைச் செய்யும் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியுள்ளார்.

கொழும்பு நகரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விடுதலைப் புலிகளுடனான போரில் நேரடிச் சண்டையில் இஸ்ரேல் ஈடுபடுத்தப்பட மாட்டாது. இருப்பினும் தொழில்நுட்ப உதவிகளை இஸ்ரேல் செய்யும். புதிதாகவாங்கியுள்ள பாதுகாப்பு தளவாடங்களைப் பயன்படுத்துவதில் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு, இஸ்ரேல் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவுவார்கள்.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் இலங்கை, தனது தூதரகத்தைத் திறக்கும். இதுதொடர்பான ஒப்பந்தம் நியூயார்க் நகரில் திங்கள்கிழமைபோடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு இதன் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தனது தூதரகத்தை இஸ்ரேல் திறக்குமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.

ஏழு நாடுகளிலிருந்து ஆயுதம்:

இஸ்ரேல் உள்பட ஏழு நாடுகளிடம் ஆயுதம் கோரி இலங்கை தொடர்பு கொண்டுள்ளது. அவசரமாகத் தேவைப்படும் ஆயுதங்களை வாங்க உடனடியாக 174மில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 880 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலிடமிருந்து ஏழு "கிபிர் ரக போர் விமானங்களை இலங்கை வாங்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது விடுதலைப் புலிகளுடனான போரில் இந்த வகைவிமானங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற