தமிழகத்தில் இன்று
சென்னை:
புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு சென்னையில் வரும் செப்டம்பர் 6 ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திங்கள்கிழமை புதியதமிழகம் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடந்தது. பின்னர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் பேசுகையில், புதியதமிழகம் கட்சியின் மாநில மாநாடுவரும் செப்டம்பர் 6 ம் தேதி சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளோம். வரும் தேர்தல் திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இடஒதுக்கீட்டிற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் யார் உண்மையிலேயே பாடுபடுகிறார்களோ அவர்களுடன் நாங்கள் கூட்டணிவைத்துக் கொள்வோம். மேலும் கல்லூரிகளில் பாடமொழிகள் வாரியாக இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையைவலியுறுத்துவோம்.
எங்கள் கட்சிக்காக நாங்கள் நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ 1000 என்ற கணக்கில் ரூ 10 கோடி நிதி திரட்ட முடிவுசெய்துள்ளோம் என்று அவர் கூறினார்.