நிகழ் காலத்தில் நில்!
நமது மூக்கிலிருந்து பிரிந்த சுவாசம் மீண்டும் ஞாபமாக நமது மூக்கிற்கே வந்தால்தான்உயிர்வாழ முடியும். அது வழிதவறி வேறு மூக்கு தேடினால் கதை கந்தலாகி விடும்.எனவே இந்த மூச்சு தான் உத்தரவாதம். சாசுவதம். அதில் வாழ்வது முக்கியம்.
""செயலைச் செய்.செயலைச் செயலுக்காகச் செய். செயலில் ஒன்றிச் செய்"" என்கிறகீதையின் சாரம் நிகழ்காலத்தில் இருத்தலைப் புரிய வைக்கிறது.
இரவு பத்துமணிக்கு மேல் ஒரு கிராமத்தில் எனக்கு பகவத்கீதை சொற்பொழிவு...எதிரே இருந்த நபர் நன்கு சாப்பிட்டுவிட்டு வந்து தூங்கி வழிந்தார். சாமியாடி.தேவலோகம் , பிதுர்லோகம் கனவுகளால் பயணித்து திடீர் என்று ஓர் உலுப்பு உலுப்பிவிழிப்பார்.
தாம் தூங்கியதை பக்கத்து நபர் பார்த்த அவமானம் தீர அவரைப் பார்த்துச் சிரித்தார்.பிரேத களையில் இவர் சிரித்ததில் அவர் பயந்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
உடனே திருவாளர் தூக்கம், சொற்பொழிவு செய்யும் என்னை முறைக்க எனக்குவருத்தமாகி விட்டது. அந்-த சாமியாடி தூக்கம் அவர்கள், பாதி தூங்கி பாதி விழித்துப்பாடாய்ப்படுத்தினார். அவர், என் கூட்டத்தில் தூங்கியதில் எனக்கு வருத்தமேயில்லை.பாவம்.. அவருக்கு வீட்டில் வராத தூக்கம் சொற்பொழிவில் வந்தால் நிம்மதியாக நான்தூங்கவிடத் தயார்.
என் நிலை இதுதான்.. ""நீ ஏன் என் சொற்பொழிவில் தூங்கினாய்"" என்று கேட்கமாட்டேன். ""இடை இடையே ஏன் விழித்தாய்"" இதுதான் என் கேள்வி.
குற்ற உணர்வு காரணமாக ஆனந்தமான தூக்கத்தை நன்கு அனுபவிக்காமல் அறுத்துக்கொள்வது அவசியம் தானா? ""எதைச் செய்கிறாயோ அதில் பூரணமாக இரு""!என்கிறேன் தவறா?
ஸ்ரீமான் தூக்கம் அவர்கள் என்னைப் பாடாய்ப்படுத்திய பிறகு வீட்டுக்குப் போனதும்நிம்மதியாகத் தூங்கலாம் அல்லவா? அதுதான் இல்லை! ஏன்? பிறகு சொல்கிறேன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications