For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

அ-ழ-கி-ரி, ஸ்டா-லின் கட்-அ-வுட் கள் ஏன் க-ரு-ணா-நி-தி கண்-ணுக்-கு தெரி--வ-தில்-லை? ஜெ. கேட்-கி-றார்-

சென்னை:

-முதல்வர் கருணா-நிதியின் -நிர்வாகத் இயலாமை காரணமாக தமிழகம் சீரழிந்து விட்டது என்று அதி-முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆவேச அறிக்கைவெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:

கருணா-நிதி தலைமையிலான தமிழக அரசின் -நிர்வாக இயலாமை காரணமாக ஏற்பட்டுள்ள- -நஷ்டங்களையும், ச-ரிவுகளையும் குறிப்பிட்டு தலைமைத்தணிக்கை அதிகா-ரி அளித்துள்ள அறிக்கையில் சில பகுதிகளை மட்டும் -நான் சுட்டிக் காட்டி வருவாய் கணக்கில் 1998-99ம் ஆண்டில் 3,437 கோடி ரூபாய்இழப்பு ஏற்பட்டிருப்பதை மக்களிடம் எடுத்துச் சொன்னால், கருணாநிதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

கருணாநிதியின் -நிர்வாகத் திறமையின்மை காரணமாக எப்படித் தமிழக அரசின் -முதலீட்டுச் செலவுகள் ச-ரிவடைந்து இருக்கிறது என்பது தலைமைத்தணிக்கை அதிகா-ரியின் அறிக்கை -மூலம் தெளிவாகவே தெரிய வருகிறது.

இதுவரை தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை உச்சக் கட்டத்திற்குக் கொண்டு சென்று விட்டதாக முதல்வர் கருணா-நிதி சொன்னவை எல்லாம் பொய்யானதகவல்கள். மக்களை ஏமாற்றும் செயல்கள். இதை மக்களுக்கு தெ-ரிவிக்க வேண்டியது எனது கடமை.

தமிழக அரசின் நிர்வாகத்தில் கோளாறுகளை மட்டுமே அரங்கேற்றி உள்ள கருணா-நிதியின் -முக-மூடியைக் கிழிப்பதற்கு தணிக்கை அதிகா-ரியின்அறிக்கையை -நான் சுட்டிக் காட்டினால், அந்த விமர்சனத்தை அவரால் தாங்கிக் கொள்ள -மு-டியவில்லை.

1976ம் ஆண்டு எப்படி நாடாளுமன்றத்தில் கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அது பொதுச் சொத்தாகஆகிவிட்டதோ, அதேபோன்று இப்போது தமிழக அரசு -நிர்வாகம் பற்றிய தலைமைத் தணிக்கை அதிகா-ரியின் அறிக்கை கடந்த 18ம் தேதி தமிழகசட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இதுவும் பொதுச் சொத்தாக ஆகி விட்டது.

தணிக்கை அதிகாரியின் அறிக்கையில், கருணாநிதி அரசின் -நிர்வாக லட்சணம் பற்றி ஏராளமான உதாரணங்கள் தரப்பட்டிருக்கின்றன. -நிதி நிர்வாகத்தில்அதிகளவில் சீர்கேடுகள் -நடந்திருக்கின்றன என்று அறிக்கையில் தெ-ரிவிக்கப்பட்டுள்ளதை கருணா-நிதி படித்துப் பார்க்க வேண்டும். அரசின் தமிழ் மொழிவளர்ச்சித் துறை என்ற இலாகா ஆங்கிலத்தைத் தமிழாக்கித் தருவதற்காகவே அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் துறையை "ஐந்தமிழ் அறிஞர்கருணா-நிதி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றி தலைமைத் தணிக்கை அதிகா-ரி குறிப்பிடுகையில், மின் பகிர்மானத் தொடர்புகளை -நிறுவுவதில் மின்சார வா-ரியம் செய்ததாமதத்தினால் 116.05 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த கம்பெனிக்காரர் லாபம் அடைந்தார் என்பது தெளிவாகிறது.

இதுபற்றி ஒன்றுமே தெரியாதவர் போல் -முதல்வர் பாசாங்கு செய்கிறார். போக்குவரத்துத் துறை இந்த ஆட்சியில் எவ்வளவு சீர்கேடு அடைந்து விட்டதுஎன்பதும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் புதிய பஸ்கள் வாங்குவதற்காக 98-99ம் ஆண்டு அரசின் பங்குமுதலீடாக 200 கோடி தரப்பட்டுள்ளது.

இந்த தொகை தமிழ்-நாடு போக்குவரத்து -நிதி -நிறுவனம் என்ற பெய-ரில் டொபாசிட் செய்யப்பட்டு, அந்த -நிறுவனத்திடம் போக்குவரத்துக் கழகம்வாங்கிய கடன் பாக்கியை சரிகட்டுவதற்கு 153.65 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டது. இதுபோன்று அரசு நிதியை கடனுக்கும், வட்டிக்கும்கொடுத்து விட்டு பஸ் வசதியை செய்து தராமல் ஒரே -நிதியாண்டில் இரண்டு -முறை பஸ் கட்டணத்தை உயர்த்தியதும் கருணா-நிதி அரசு தான்.

இப்படி ஆட்சி நடத்தும் கருணாநதி தமிழகத்தின் நலனுக்காகவே உழைப்பதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். எத்தகைய மோசமான நதி -நிர்வாகத்தை கருணா-நிதி--நடத்துகிறார் என்பதற்கு 98-99ம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட மானியத்தை விட 728 கோடி ரூபாய் அதிகமாக செலவழித்திருக்கிறார் என்பதே சான்று.உபயோகப்படுத்தப்படாமல் மத்திய அரசின் நிதி -நான்கு துறைகளில் 1.08 கோடி ரூபாய் இருந்துள்ளது.

தமிழக அரசின் விமானத்தையும், ஹெலிகாப்டரையும் விற்று அந்த பணத்தில் கிராமப் புற ஏழை மக்களுக்கான 400 ஆம்புலன்ஸ் வண்டிகள் வாங்கப்போவதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வாய்ஜாலம் காட்டினார். ஆனால், முதல்வர் கருணா-நிதியோ அந்தவிமானங்களில் தனது 2 மனைவிகளுடன் சுற்றுப் பயணம் செய்தது தான் மீதம்.

விமானத்தை விற்பதாக கருணாநிதி கூறியதும், தமிழகத்தின் மிகப் பெரிய தொழில் அதிபர் அதை வாங்க -முன் வந்தார். அவருக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கவிரும்பாததால் அவருடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. அந்த தொழில் அதிப-ரிடம் 5 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டது கருணா-நிதியின் மகன் தானே?விமானங்களை வாங்க -முன் வந்த மற்ற சிலரும் இதே பாணியில் விரட்டப்பட்டனர்.

இந்த விமானங்களை பராமரிப்பதற்கு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 6.10 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சியில்விமானத்தை அரசுப் பணிகளுக்கு பயன்படுத்திய -நரம் போக மற்ற நேரங்களில் தனியாருக்கு வாடகைக்கு விடலாம் என்று உத்தரவிட்டிருந்தேன்.

அதைப் போலவே கருணாநிதி தனது மனைவிகளுடன் சுற்றுப் பயணம் போன நேரம் போக மீதி -நரங்களில் வாடகைக்கு தந்திருந்தால், விமானங்களில்பராம-ரிப்பிற்குத் தேவையான வருவாய் அரசுக்கு கிடைத்திருக்கும்.

கருணாநிதியின் ஆடம்பரம் காரணமாக, நிர்வாகச் சீர்கேடு காரணமாக அரசு -நிதி நர்வாகம் சீரழிந்து போயிருக்கிறது என்று -நான் குறிப்பிட்டால்,கட்அவுட்களை பற்றி அறிக்கை விடுகிறார். கட்அவுட்களுக்கும் தணிக்கை அறிக்கைக்கும் என்ன சம்பந்தம்? -முதல்வர் பதவி என்பதுகோபாலபுரம் - புனித ஜார்ஜ் கோட்டை - ஆலிவர் ரோடு என்பதோடு -முடிந்து விடாது.

இந்த வட்டத்திற்கு வெளியே சென்று பார்த்தால் தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் வைத்திருக்கிற கட்அவுட்டுகள் கண்ணுக்குத்தெ-ரியும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X