For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
செப்டம்பர் முதல் துபாய் டூ சென்னை விமான சேவை துவக்கம்
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், செப்டம்பர் முதல் துபாயிலிருந்து சென்னைக்கு விமான சேவையை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவன பொது மேலாளர் மாரிஸ் ஃபிளாநாகான் கூறுகையில், செப்டம்பர் முதல் இந்தியாவிற்கு விமானம் விடுவதற்கு நாங்கள்செய்துள்ளோம். 1000 இருக்கைகளுடன் இந்த விமானங்கள் இருக்கும்.
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து மும்பை மற்றும் டெல்லி நகரங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக விமான சேவை நடந்து வருகிறது. தற்போது முதல்முறையாக சென்னைக்கு விமானம் விடப்படவுள்ளது.
அதிகமான பயணிகள் பயனடையும் விதத்தில் நாங்கள் விமானத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.