கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சாதிச் சங்கங்களுக்குத் தடை கோரி ரயில் மறியல்
சென்னை:
சாதிச் சங்கங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஜூலை 5ம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம்நடத்தப் போவதாக அம்பேத்கர் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
அதன் தலைவர் வை.பாலசுந்தரம் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதைக் கண்டித்தும், சாதிச் சங்கங்களை தடை செய்ய வேண்டும்என்று வலியுறுத்தியும் இப்பேராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.
சாதிச் சங்கங்களைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு கோடி பேர் மத்திய, மாநில அரசுகளுக்குகடிதம் எழுதும் வகையில் கடிதப் போர் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
கள்ளச் சாராயத்தை ஒழிக்க "நீலப்படை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். மாவட்டந்தோறும் இந்தஅமைப்பினர் கள்ளச் சாராயத்திற்கு எதிராக செயல்படுவார்கள். சென்னையிலும் இந்த அமைப்புஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு மெரினா கடற்கரையில் பயற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!