வேலைவாய்ப்பு அலுவலகங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தமிழக அரசுத் துறைகளில் வேலை வேண்டுமா? முதலில் நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்,உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் 32 இடங்களில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. தமிழக அரசுத் துறைகளில் அவ்வப்போதுகாலியாகும் இடங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவே ஆட்கள்தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக அரசுப் பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் கலந்து கொண்டு வெற்றிபெற்றாலும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு பெற்றிருந்தால்தான் வேலை பெற முடியும்.

ஆகவே, எல்லோரும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது நல்லது. இதற்கென்று தனியாக எந்தகுறிப்பிட்ட தகுதியும் தேவையில்லை.

தற்போது 10-வது மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் மாணவ, மாணவிகள்தங்களை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வசதியாக, தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்புஅலுவலகங்களின் முகவரியை இங்கே கொடுத்துள்ளோம்.

8-ம் வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்களும்தான் பதிவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. துவக்கக்கல்வியில் 5-ம் வகுப்புப் படித்திருந்தாலே போதுமானது. பிறந்த சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வீட்டு முகவரிஆகிவற்றை வைத்துப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தங்களது பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். புதுப்பிக்கமறந்துவிட்டால், அடுத்த 18 மாதங்களுக்குள் பதிவைப் புதுப்பிக்க காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது. இதையும்தவறவிட்டால், பதிவு மூப்பை இழக்க நேரிடும்.


Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற