For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தொண்டர்களை முடுக்கி விட குழு அமைக்கிறார் ஜெ.

சென்னை:

சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் வகையில் ஒவ்வொருசட்டமன்றத் தொகுதியிலும் 9 பேர் கொண்ட குழுவை அமைக்க அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

அந்தந்த தொகுதிக்கான தேர்தல் பணிகள் அனைத்தையும் இக்குழுவிடம்ஒப்படைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

2001-ல் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில்அதிமுக இறங்கி விட்டது. ஏற்கனவே நாடாளுமன்றத் தொகுதிகள் வாரியாக 40ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி முடித்துள்ளார் ஜெயலலிதா.

அந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளையும், தேர்தல் பணிகளையும்செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 பேர் கொண்ட குழுஅமைக்கப்படும் என்று முன்பே ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஐந்துபேருக்கு பதிலாக 9 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று ஜெயலலிதாஇப்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டஅறிக்கையில், இந்த 9 பேர் கொண்ட சட்டமன்றத் தொகுதிக் குழுக்களைஅமைப்பதற்காக கட்சியின் மாநில நிர்வாகிகள் 10 பேர் கொண்ட அமைப்புக் குழுஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குழுவில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கொள்கை பரப்புச் செயலாளர்ஓ.எஸ்.மணியன், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் தினகரன், தலைமை நிலையச்செயலாளர் எஸ்.என்.ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர்கள் வி.பாலகிருஷ்ணன்,தனபால், மகளிரணிச் செயலாளர் சுலோச்சனா சம்பத், எம்ஜிஆர் மன்றச் செயலாளர்எஸ்.வி.தங்கவேலு, இளைஞரணிச் செயலாளர் ஆர்.சாமி, மாணவரணிச் செயலாளர்தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த 10 பேரும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று கூட்டங்கள் நடத்திசட்டமன்றத் தொகுதிக்கான 9 பேர் குழுவினரை தேர்வு செய்து, அவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள். 12ம் தேதி மதுரை மாவட்டத்தில்இருந்து இப்பணியை துவங்கும் இவர்கள் 25ம் தேதி வரை இடைவிடாமல் சுற்றுப்பயணம் செய்து இப்பணியை முடிப்பார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான கூட்ட ஏற்பாடுகளை செய்வதுடன்,அதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் தவறாமல் கலந்து கொள்ளச்செய்வது மாவட்டச் செயலாளர்களின் பொறுப்பு. அதை சரிவரச் செய்யாதவர்கள் மீதுஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X