தமிழகத்தில் இன்று
சிங்கர் கோப்பையை வென்றது இலங்கை
கொழும்பு:
கொழும்பில், வெள்ளிக்கிழமை நடந்த சிங்கர் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டியில், 30 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்கஅணியை, இலங்கைத் தோற்கடித்து கோப்பையை வென்றது.
முதலில் ஆடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது.பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து264 ரன்கள் மட்டுமே எடுத்தது.
துவக்கத்தில் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா பின்னர்சரிவைச் சந்தித்தது. கிர்ஸ்டன் மற்றும் ஆண்ட்ரூ ஹில் ஆகியோர் இணைந்து முதல்விக்கெட்டுக்கு 91ரன்கள் எடுத்தார். வற்றி இலக்கை மட்டுமே மனதில் கொண்டுதென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர்கள் விளையாடினர்.
ஆனால் முத்தையா முரளிதரன் வந்த பிறகு நிலைமை மாறியது. 52 பந்துகளில் 35ரன்களை எடுத்திருந்த ஹில், பெள்ல்ட் ஆனார். கல்லிஸ் ரன் அவுட் செய்யப்பட்டார்.இலங்கை சுழற்பந்துவீச்சாளர்களின் பந்தவீச்சு, தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகத்தைமட்டுப்படுத்தியது. விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழத் துவங்கின.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கிர்ஸ்டன், 93 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். இதில்ஆறு அருமையான சிக்ஸர்களும் அடங்கும். முன்னணி வீரர்கள் வெளியேறியநிலையில் அணியின் சரிவைத் தடுக்கும் பொறுப்பு, குளூஸ்னர், ரோட்ஸிடம்விடப்பட்டது. இருவரும் போராடினர். இருப்பினும் கூட அணியின் தோல்வியைத்தவிர்க்க முடியவில்லை.
முரளிதரன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரே மேன் ஆப் திமேட்ச்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக டாஸ் வென்ற கேப்டன் ஜெயசூர்யா, இலங்கை பேட் செய்யும் என்றுஅறிவித்தார். இலங்கைத் தரப்பில் ருஸ்ஸல் அர்னால்டு (51) அருமையானதுவக்கத்தைக் கொடுத்தார். அவருடன் சேர்ந்து குணவர்த்தனே (50) அடித்து ஆடினார்.இந்த ரன்களை 43 பந்துகளில் அவர் சேர்த்தார். கேப்டன் ஜெயசூர்யா 68 ரன்கள்எடுத்தார்.