தமிழகத்தில் இன்று
மலைவாழ் தீவிரவாதிகள் சுட்டு அஸ்ஸாமில் 10 பேர் சாவு
குவஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், கார்பி ஆங்லாங் மாவட்டத்தில் 10 பேரை மலைவாழ் கொரில்லா தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
அஸ்ஸாமில் தங்களுக்கு அரசியல் சுயாட்சி உரிமை வழங்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். அவ்வப்போதுமலைவாழ் மக்கள் அல்லாதவர்கள் வசிக்கும் கிராமங்களில் திடீரென்று புகுந்து மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.
கார்பி ஆங்லாங் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 10 பேரில் 2 சிறுவர்களும் அடங்குவர் என்று பாதுகாப்புப் படைவீரர்கள் கூறினர்.
கிராமத்துக்குள் திடீரென்று புகுந்த தீவிரவாதிகள் எதிரே வந்த அனைவர் மீதும் கண்மூடித்தனமாக தங்களிடமிருந்த தானியங்கித் துப்பாக்கியால்சுட்டனர். இதில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் இறந்தனர்.
இந்தத் தாக்குதலில் பல வீடுகளும் சேதமடைந்ததாகப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.