தமிழகத்தில் இன்று
ஆகஸ்ட்டில் இந்திய வனத்துறை அரசுப்பணி (ஐ.எஃப்.எஸ்.) தேர்வுகள்
டெல்லி:
மத்திய அரசுப் பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வனத்துறைபணிக்கான தேர்வுகள் (Indian Forest Service) ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதிதுவங்குகின்றன.
நாடு முழுவதும் 91 மையங்களில் நடைபெற உள்ள இத் தேர்வில் கலந்து கொள்ளஉள்ள தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனமதிச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் தேர்வாணைய அலுவலகத்துக்கு நேரில்வந்தோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தொலைபேசி எண்கள்: 3381125, 3385271. 011-3387310 என்ற ஃபேக்ஸ் எண்மூலமும் விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு மையம் பற்றிய விவரங்கள் தேர்வாணையத்தின் இன்டர்நெட் தளத்தில்(http/upsc.gov.in) வெளியிடப்படும். இதில் தேர்வு மையங்கள், தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
யு.என்.ஐ.